புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் நாராயணசாமி போட்டியில்லை - வேட்பாளர்கள் பட்டியலில் பெயர் இல்லை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட மாட்டார் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட மாட்டார் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video

கடந்த 2016 ஆம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை புதுச்சேரி முதல்வராக தேர்வு செய்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை.
அதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் முதல்வராக நீடித்தார். துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டது. துணைநிலை ஆளுநரை சமாளிக்கவே நாராயணசாமிக்கு நேரம் சரியாக இருந்தது.

நாராயணசாமி
ஐந்தாண்டுகள் ஆட்சி முடியும் முன்பே முதல்வர் நாராயணசாமியின் மீதான அதிருப்தியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து நாராயணசாமியின் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் போனது.

குடியரசுத்தலைவர் ஆட்சி
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராராஜன். சட்டசபையில் பேசிய நாராயணசாமி நம்பிக்கை வாக்கு கோரினார். வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்றாலும் நாராயணசாமியின் ஆட்சி பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனையடுத்து நாராயணசாமியின் ஆட்சி கவிழ்ந்தது. புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி
புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட் 1 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 என காங்கிரஸ் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

நாராயணசாமி பெயர் இல்லை
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை கட்சித்தலைமை அறிவித்தது. அதில் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை.
ஏனாம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அங்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

நாராயணசாமி போட்டியில்லை
இந்நிலையில், புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட மாட்டார் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications