புதுச்சேரியில் குதிரையேற்றப் போட்டிகள்.. . 3 நாள்.. நூற்றுக்கணக்கான குதிரைகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய அளவிலான குதிரையேற்றப் போட்டிகள் இன்று தொடங்கியது. இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், நூற்றுக்கும் மேற்பட்ட குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் செயல்பட்டு வரும் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி சார்பில் ஆண்டுதோறும் குதிரையேற்றப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 20 வது குதிரையேற்றப் போட்டிகள் இன்று துவங்கியது.

வரும் மார்ச் 1 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட 12 கிளப்களை சேர்ந்த 60 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் 100 குதிரைகள் பங்கேற்றுள்ளன. இன்று முதல் போட்டியாக நடை அலங்கார பிரிவில் குதிரையை கட்டுப்படுத்துதல், நடை பயிற்சி, வணங்குதல் ஆகியவற்றை வீரர்கள் செய்து காட்டினார்கள்.

இதனை தொடர்ந்து மீடியம் டிரெஸ்சாஜ், 70 செ.மீ, 100 செ.மீ, ஷோ ஜம்பிங், எலிமென்டரி டிரெஸ்சாஜ், நோவிஸ் டிரெஸ்சாஜ், 105 செ.மீ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. குதிரையேற்றப் போட்டியை புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இப்போட்டியில் சர்வதேச நடுவர்களான சாமி, சுனில் ஸ்ரீவ்தாஸ் நடுவர்களாக செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications