புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி - முதல்வராகும் ரங்கசாமி

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி புதுச்சேரியில் அமோக வெற்றி பெற்றுள்ளது. ரங்கசாமி புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்ற உள்ளார். புதுச்சேரியில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

30 இடங்களை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில், தொடக்கத்தில் இருந்தே அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. 6 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக படுதோல்வியடைந்தது.

புதுச்சேரியில் மற்றொரு கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தி.மு.க. 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

புதுவையை தட்டி தூக்கிய என்.ஆர்.காங்கிரஸ்.. பாஜக விஸ்வரூப வெற்றி.. அனைத்திலும் அதிமுக தோல்வி!புதுவையை தட்டி தூக்கிய என்.ஆர்.காங்கிரஸ்.. பாஜக விஸ்வரூப வெற்றி.. அனைத்திலும் அதிமுக தோல்வி!

என். ஆர் காங்கிரஸ்

என். ஆர் காங்கிரஸ்

1. ஜெயக்குமார் - மங்கலம்
2. ரமேஷ் - கதிர்காமம்
3. லட்சுமிகாந்தன் - ஏம்பலம்
4. ராஜவேலு - நெட்டப்பாக்கம்
5. தட்சிணாமூர்த்தி - அரியாங்குப்பம்
6. ஆறுமுகம் - இந்திரா நகர்
7. ரங்கசாமி - தட்டாஞ்சாவடி
8. சந்திர ப்ரியங்கா - நெடுங்காடு
9. திருமுருகன் - காரைக்கால் வடக்கு
10. ராஜ்பவன் - லட்சுமி நாராயணன்.

 பா.ஜ.க

பா.ஜ.க

1. ஜான்குமார் - காமராஜ் நகர்
2. ரிச்சர்ட் ஜான்குமார் - நெல்லிதோப்பு
3. நமச்சிவாயம் - மண்ணாடிப்பட்டு
4. காலாப்பட்டு - கல்யாண சுந்தரம்.
5. மணவெளி - ஏம்பலம் செல்வம்.
6. சுடு - சாய் சரவணன்

காங்கிரஸ்

காங்கிரஸ்

1. வைத்தியநாதன் - லாஸ்பேட்
2. ரமேஷ் பரம்பத் - மாஹே

திமுக

திமுக

1. உப்பளம் - அனிபால் கென்னடி
2. சிவா - வில்லியனூர்
3. நாஜிம் - காரைக்கால் தெற்கு
4.சம்பத் - முதலியார் பேட்டை
5.நாத தியாகராஜன் - நிரவி பட்டினம்.
6.பாகூர் - செந்தில்.

5 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி

5 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி

1. கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அஷோக் - ஏனாம்
2. நேரு - உருளையன்பேட்டை
3. பிரகாஷ் குமார் - முத்தியால்பேட்டை
4. அங்காளன் - திருபுவனை
5. சிவா - திருநள்ளாறு
6. சிவசங்கர் - உழவர்கரை

English summary
The NR Congress, the BJP and the AIADMK have won a landslide victory in Puducherry. Rangasamy is about to take over as the Chief Minister of Puducherry. In Puducherry, 5 independent candidates have won.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X