புதுச்சேரியிலும் கல்யாணத்தை முடித்த கையோடு மாலையும் கழுத்துமாக ஓட்டுப் போட்ட புது ஜோடி
Recommended Video
புதுச்சேரி: திருமணம் முடித்த கையோடு மணமக்கள் மணக்கோலத்தில் வந்து மக்களவை தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைதேர்தலில் வாக்களித்து, தங்களுடைய ஜனநாயக கடமையாற்றினர்.
புதுச்சேரியில் மக்களவை தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலிலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. புதுச்சேரியில் வாக்களர்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இந்நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட செல்வக்குமார் என்ற இளைஞருக்கும் தீபா என்ற பெண்ணுக்கு இன்று காலை கதிர்காமம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு ஜனநாயக கடுமையான, வாக்கினை செலுத்த வேண்டுமென்ற நோக்கில் மணமக்கள் தட்டாஞ்சாவடி தொகுதியான குண்டுபாளையம் வாக்குசாவடி மையத்திற்கு சென்று இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களித்தனர்.

இதேபோல் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கில் முழுவதுமாக பெண் தேர்தல் அதிகாரிகளை கொண்ட 7 சிறப்பு வாக்குப்பதிவு மையங்களை அமைக்கப்பட்டிருந்தன.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏகப்பட்ட புது மண ஜோடிகள் திருமணம் முடிந்த கையோடு ஓட்டுப் போட வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications