புதுவையில் பாஜகவை கழற்றிவிட்டு... தனியாக களமிறங்கும் ரங்கசாமி... காரணம் என்ன?
புதுவை: சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் பாஜக, திமுக, மக்கள் நீதி மய்யம் என அனைத்து கட்சிகளும் கூட்டணிக்காக என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அவர் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரிக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஐந்து மாநிலங்களுடன் சேர்த்து மே 2ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியை பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சிகளே பிரதான கட்சிகளாக உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக இந்த இரு கட்சிகளுமே மாறி மாறி புதுச்சேரியை ஆட்சி செய்துள்ளன.

காங்கிரஸ் ஆட்சி
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே இருந்தது. இருப்பினும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏகள் வரிசையாக தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்கள். அவர்களில் சிலர் பாஜகவிலும் லட்சுமி நாராயணன் என்ஆர் காங்கிரஸ் கட்சியிலும் ஐக்கியமானார்கள். அதேபோல திமுகவைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும் தனது பதவியை ராஜினாமா செய்ய, புதுவையில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியைப் பறிகொடுத்தது.

ஆட்சி அமைக்கவில்லை
என்ஆர் காங்கிரசுக்கு தற்போது எட்டு சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல பாஜகவுக்கு மூன்று நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் பாஜகவின் ஆதரவுடன் என் ஆர் காங்கிரஸ் கட்சியால் எளிதில் ஆட்சி அமைத்திருக்க முடியும். தேர்தல் சமயத்தில் ஆளும் கட்சியாக இருந்தால், அது சாதகமாக இருக்கும் என்பதால், ரங்கசாமி ஆட்சி அமைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரிமை கோருவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரங்கசாமி தொடர்ந்து அமைதி காத்தார். இதனால் புதுவையில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாஜக கூட்டணி
இந்தச் சூழ்நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்குச் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜகவுடன் இணைந்து என் ஆர் காங்கிரஸ் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பாஜகவுக்கு ரங்கசாமி பிடிகொடுக்கவில்லை. இது குறித்து புதுவை பாஜக தலைவர் வி சுவாமிநாதன் கூறுகையில், "அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம், அவர் எங்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். கூட்டணியுடன் மட்டுமே புதுவையில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

ரங்கசாமி ஆலோசனை
ஆனால், பாஜகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள ரங்கசாமி தொடர்ந்து தயக்கம் காட்டியே வருகிறார். புதுவையில் உள்ள 30 இடங்களில் மிக வலுவான 18 உறுப்பினர்களை என் ஆர் காங்கிரஸ் கட்சியால் களமிறக்க முடியும் என ரங்கசாமி நம்புகிறார். இதனால் ஆட்சி அமைக்க போதும் என்பதாலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அது வரும் காலங்களில் தனது அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடும் என அவர் தயங்குகிறார். இது மட்டுமின்றி ரங்கசாமியை முதல்வர் வேட்பளாரக அறிவிக்கவும் பாஜக யோசிக்கிறது. இதுவும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மற்ற கட்சிகள் அழைப்பு
பாஜக தவிர மற்ற கட்சிகளும் என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தொடர்ந்து தூது அனுப்பி வருகின்றன. புதுவையில் முதலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்பிய திமுக, தனது முடிவை மாற்றிக்கொண்டு என் ஆர் காங்கிரஸ் கட்சிக்குக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. ஜனநாயகத்திற்கு விரோதமான பாஜகவைப் புதுச்சேரியில் நுழைய விடக்கூடாது என்பதால் காங்கிரஸ்-திமுக கூட்டணியுடன் ரங்கசாமி கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியும் இதையே வழிமொழிந்தது. அதேபோல மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்தும் கூட்டணிக்கு ஆஃபர் சென்றுள்ளது.

என்னவாகும் கூட்டணி
இப்போது இறுதி முடிவை ரங்கசாமி தான் எடுக்க வேண்டும். ஒருவேளை பாஜகவுடன் அவர் கூட்டணி அமைத்தால், அதிமுக-என்ஆர் காங்கிரஸ்- பாஜக என்ற வலுவான கூட்டணி உருவாகும். அதேநேரம் தனித்துக் களமிறங்க ரங்கசாமி முடிவெடுத்தால், அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications