ஆடுகளை ஆட்டைய போட்டு அல்ட்ரா மாடர்ன் வாழ்க்கை - வசமாய் சிக்க வைத்த சிசிடிவி
புதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தொடர்ந்து திருடி மது, பைக், ஸ்மார்ட் போன் என வாங்கி உல்லாசமாக உலா வந்த இரண்டு அல்ட்ரா மாடர்ன் திருடர்களை புதுச்சேரி போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்து கம்பி என்ன வைத்துள்ளனர்..
Recommended Video
தமிழகத்தில் இளைஞர்கள் சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது கஞ்சா மது போதைக்கு அடிமையாகி அதற்கு தேவைப்படும் பணத்திற்காக கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா முடக்கம் காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு போதைக்கு அடிமையாகி குற்ற செயல்களில் ஈடுபடும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருவது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.

புதுசேரியில் அதிர்ச்சி
இந்த நிலையில் புதுச்சேரியில் அல்ட்ரா மாடர்ன் வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இருசக்கர வாகனங்களை ஆடுகளை திருடி வந்த இளைஞர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி அருகே திருவாண்டார் கோயில் பகுதியில் இந்திரா நகரை சேர்ந்த சற்குண பாண்டியன் என்பவர் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகை விலை உயர்ந்த ஆடைகளை வாங்கி வளர்த்து வருகிறார். ஆடுகளை மேய்த்து அவற்றை அழகுக்காகவும் இறைச்சிக்காகவும் விற்பனை செய்து வந்துள்ளார்.

காணாமல் போன ஆடுகள்
அவர் வளர்க்கும் ஆடுகளை திருவாண்டார் கோயில் ஏரிக்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாண்டார் கோயில் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பிய போது அதனை சற்குணபாண்டியன் எண்ணியுள்ளார். அப்போது சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள உயர் ரக ஆடு ஒன்று காணாமல் போனது சற்குணபாண்டியனுக்கு தெரியவந்தது இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகிய சற்குணபாண்டியன் இதுகுறித்து திருபுவனை காவல் நிலையத்தில் போலீசாரிடம் ஆடு திருடு போனது என புகார் அளித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள்
சற்குண பாண்டியன் அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த திருபுவனை காவல் நிலைய போலீசார் ஆடு காணாமல் போன பகுதிகளை சுற்றி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பொருத்தி இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது டிப்டாப் கெட்டப்பில் இருந்த இரண்டு இளைஞர்கள் ஆட்டினை அலேக்காக தூக்கி அதன் கால்களை கயிற்றில் கட்டி தங்களது டூவீலரில் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது இடத்தை வண்டியின் பதிவு எண் மற்றும் அடையாளங்களை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிக்கிய கொள்ளையர்கள்
நீண்ட விசாரணைக்குப் பிறகு ஆடுகளை திருடிச் சென்றது கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான விஷ்ணு மற்றும் வழுதாவூர் சேர்ந்த 23 வயதான ஆகாஷ் என்பது தெரியவந்தது . இதையடுத்து அவர்களை அலேக்காக தூக்கி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அல்ட்ரா மாடர்ன் வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பல இடங்களில் ஆடு உள்ளிட்டவற்றை விற்பனை செய்து ஸ்மார்ட்போன் பைக் என வாங்கியதை ஒப்புக் கொண்டனர். மேலும் பெரிய பேட் பகுதியில் இருந்த ஆடுகளையும் தொடர்ந்து அவர்கள் திருடியதையும் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications