அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. 'ஆபரேஷன் பாமக..' அதிர வைக்கும் டிடிவி தினகரன் வியூகம்!
Recommended Video

புதுச்சேரி: பாமகவில் இருந்து விலகிய, அக்கட்சி, மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று டிடிவி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இதன் பின்னணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 'ஆபரேஷன் பாமக' திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிட எடுத்த முடிவு, அந்த கட்சிக்கு பெரும் பாதகமாக போய்க்கொண்டு உள்ளது.
கூட்டணி உறுதியான பிறகு, பாமக மாநில துணைத் தலைவர் ரஞ்சித், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்தையும் ராஜினாமா செய்தார்.

முதல் விக்கெட் ரஞ்சித்
நேற்றுவரை திட்டிய ஒரு கட்சியோடு, பாமக எப்படி கூட்டணி வைக்கலாம் என மனசாட்சி உறுத்தியதால், விலகுவதாக அறிவித்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கொண்டார் ரஞ்சித். இந்த நிலையில்தான், பாமகவின் மற்றொரு துணைத் தலைவரான, பொங்கலூர் மணிகண்டனும் அக்கட்சியிலிருந்து சமீபத்தில் விலகினார்.

விமர்சனம்
பொங்கலூர் மணிகண்டன் அளித்த பேட்டியில், லோக்சபா தேர்தலில், 7 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. திண்டுக்கல் தொகுதிக்கு பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள். அந்த தொகுதி மட்டுமில்லை, அனைத்து தொகுதிக்கும் நான் களப்பணிக்கு சென்றபோது, மக்கள் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். மோசமாக பேசுகிறார்கள்.

குற்றச்சாட்டுகள்
அன்புமணிக்கு மட்டுமே ராமதாஸ் முன்னுரிமை கொடுக்கிறார். பிற வேட்பாளர்கள் தோற்றாலும் அவருக்கு கவலையில்லை. காடுவெட்டி குருவிற்கு மரியாதை இல்லை. இவ்வாறு அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பொங்கலூர் மணிகண்டன்.

பாமக டூ அமமுக
இந்த நிலையில், இன்று புதுச்சேரியில், டிடிவி தினகரன் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பொங்கலூர் மணிகண்டன் இணைந்து கொண்டார். பாமகவிலிருந்து விலகிய இரு முக்கிய நிர்வாகிகளும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஆபரேஷன் பாமக
தென் தமிழகம் குறிப்பாக மதுரை மண்டலத்தில் உள்ள தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தினகரன் கட்சி வலுவானதாக இருக்கிறது. வட மாவட்டங்களில் வேரூன்ற, பாமகவின் முக்கிய தலைவர்களை அமமுக குறி வைத்து தூக்குகிறது என்ற சந்தேகத்தை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications