புதுச்சேரியில் 452 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.. சுற்றுலாத் தலங்களில் சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரி: புதுச்சேரியில் 452 மையங்கள் மூலம் 88 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க புதுச்சேரியில் 333, காரைக்காலில் 79, மாகியில் 18, ஏனாமில் 22 என மொத்தம் 452 மையங்கள் அமைக்கப்பட்டது.

நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பள்ளியில் அமைக்கபட்டுள்ள முகாமில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார்.

இன்று நடந்த சிறப்பு முகாமில் 2,000 சுகாதார ஊழியர்கள் சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட்டனர் மேலும் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, ஊசுட்டேரி மற்றும் சுண்ணாம்பார் படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி - தமிழக எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னிகோயில், திருக்கனுார் மற்றும் குருமாம்பேட் ஆகிய 6 இடங்களில், நடமாடும் போலியோ ஊர்தி மூலமும் முகாம் நடைபெற்றது. இங்கெல்லாம் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications