புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹலோ ஹவ் ஆர் யூ? உங்களை நல்லா பாத்துக்கறாங்களா? அழகா இருக்கு! ஆந்தையாரை நலம் விசாரித்த தமிழிசை

Google Oneindia Tamil News

புதுவை: புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆந்தையாரிடம் எப்படி இருக்கீங்க என கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    உங்களை நல்லா பாத்துக்கறாங்களா? அழகா இருக்கு! ஆந்தையாரை நலம் விசாரித்த தமிழிசை

    புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானாவுக்கும் ஆளுநராக உள்ளார். இந்த நிலையில் இரு மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகையில் இருப்பதை விட பொதுமக்களின் குறைகளை கேட்டறிவது, திடீரென அரசு மருத்துவமனைகளுக்கு ஆய்வு செல்வது, கொரோனா தடுப்பூசி போடும் காலத்தில் ஆய்வு செய்தது என மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.

    கோர்பேவாக்ஸ் தடுப்பூசி விலை திடீர் சரிவு! அதிரடியாய் குறைத்த பையோலாஜிகல்-இ! என்ன காரணம் தெரியுமா? கோர்பேவாக்ஸ் தடுப்பூசி விலை திடீர் சரிவு! அதிரடியாய் குறைத்த பையோலாஜிகல்-இ! என்ன காரணம் தெரியுமா?

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    அவ்வப்போது வரும் விமர்சனங்களையும் நேரில் போய் ஆய்வு நடத்தி அந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பார். தெலுங்கானாவில் மக்கள் குறைதீர்ப்பதற்காக தனது அலுவலகத்தில் ஒரு பெட்டியை வைத்துள்ளார். இதுவும் ஆளுநர் தமிழிசையுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அரசுடன் மோதல் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் ஆகும்.

    தாவரவியல் பூங்கா

    தாவரவியல் பூங்கா

    இந்த நிலையில் புதுவையில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த சிறுவர்கள் ரயிலில் குழந்தைகளோடு குழந்தையாக மாறிய துணை நிலை ஆளுநர் தமிழிசை அவர்களுடன் அமர்ந்து பயணம் மேற்கொண்டார். மேலும் சில குழந்தைகளை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பெயர் என்ன, பெரிசானதும் என்னவாக ஆசை என்பெதல்லாம் கேட்டறிந்தார்.

     தமிழிசை

    தமிழிசை

    பொதுவாகவே தமிழிசை சவுந்திரராஜன் எந்த பதவியில் இருந்தாலும் பந்தா இல்லாமல் பொதுமக்களுடன் பழகி வருவார். அதுபோல் துணை நிலை ஆளுநரானவுடனும் அந்த பண்பில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார். புதுவை வனத்துறைக்கும் சென்ற அவர் அங்கு வளர்க்கப்பட்டு வந்த மயில்கள், பறவைகள், முள் எலி ஆகியவற்றை கைகளால் தூக்கி மகிழ்ந்தார்.

    அழகா இருக்கு

    அழகா இருக்கு

    மேலும் அங்கிருந்த பல் பிடுங்கப்பட்ட ஒரு பாம்பை கையில் பிடித்து விளையாடினார். பின்னர் ஆந்தையை கையில் எடுத்த அவர் அதனிடம் Hi How Are you? எப்படி இருக்கீங்க, இங்க இருக்கிறதவர்கள் உங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார்களா என கேட்டவுடன் ஆந்தை, அவரையே பார்த்ததை பார்த்து அய்யோ எவ்வளோ அழகா பார்க்குது பாருங்களேன் என்றார்.

    English summary
    Pondicherry Lieutenant Governor Tamilisai Soundararajan played with Zoological animals which was protected by Forest department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X