"டேய் நம்புடா.. நிச்சயமா நான்தான்டா.." சிறுவனை நம்ப வைக்க படாதபாடுபடும் சந்திர பிரியங்கா
புதுச்சேரி: புதுச்சேரி பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா சிறுவனிடம் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்துக் கொண்டே அய்ய்யோ என்னடா லைன் கட்டி நிக்கிறீங்க என்று சிரிப்போடு முடிகிறது அந்த வீடியோ.
புதுச்சேரி மாநிலம், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எம்எல்ஏ
பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கெனவே இவர் விழிப்புணர்வு குறும்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்று வைரலானது. தொடர்ந்து மகளிர் தினத்தில் அம்மன் வேடமிட்ட வீடியோ வைரலாகியது.

வணிக நிறுவனம்
இந்நிலையில் தற்போதும் அவர் வணிக நிறுவனம் ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுக்கும் சிறுவனிடம் நான்தான் அமைச்சர் என விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நான் அமைச்சர்தான் என சிறுவனிடம் சொல்கிறார் சந்திர பிரியங்கா.

நம்ப மறுக்கும் சிறுவன்
அதற்கு அந்த சிறுவன் நம்ப மறுக்கிறார். உடனே அந்த சிறுவனிடம் நான் அமைச்சர் என நீ நம்ப வேண்டுமானால் நான் ஒன்று செய்கிறேன். நான் அங்கு போய் ஒளிந்து கொள்கிறேன். நீ என்னை அமைச்சர் என கூப்பிடு, யார் வருகிறார் என பார் என்கிறார். உடனே சந்திர பிரியங்கா போய் ஒளிந்து கொள்கிறார். அப்போது அந்த சிறுவன் அமைச்சர் இங்க வாங்க என அழைக்கிறான்.

வைரலாகும் வீடியோ
உடனே ஓடி வரும் சந்திர பிரியங்கா, நீ அமைச்சர் என அழைத்ததும் நான்தானே வந்தேன். வேறு யாரும் வரவில்லைதானே. அப்போ நான்தான் அமைச்சர் என்றார். பின்னர் அந்த சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பிவிடுகிறார். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications