துண்டாக தொங்கிய.. ரவுடி ஜிம் பாண்டியனின் தலை.. புதுவை கொடூர கொலையில் திடீர் திருப்பம்!
புதுச்சேரி ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார்
Recommended Video
புதுவை: ரவுடி ஜிம் பாண்டியனின் தலை துண்டாக விழுந்துவிட்டது... அஸ்வின் என்பவருடன் ஏற்பட்ட தகராறுதான் இந்த கொடூர கொலைக்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளதால், வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
அரியாங்குப்பம் சுப்பையாநகர், பாரதி வீதியை சேர்ந்தவர்தான் ஜிம் பாண்டியன். 26 வயதாகிறது. இந்த ஏரியா ரவுடி இவர்... ஏகப்பட்ட அடிதடி, கொலை முயற்சி, திருட்டு கேஸ்கள் இவர் மீது உள்ளன.
நேற்று மாலை இருட்டும் நேரம்.. வாலிபால் கிரவுண்டில் செல்போனில் பேசி கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமும் அங்கு இல்லை. அப்போதுதான், திடுதிப்பென்று 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கையில் வெடிகுண்டு, கத்தி, அரிவாள் இருந்தன.

வெடிகுண்டு
இதை கண்டு அலறிய ஜிம் பாண்டியன் அங்கிருந்து தப்பித்து ஓட ஆரம்பித்தார். இப்படி தப்பித்து ஓடக்கூடும் என்றுதான் அவர்கள், கையிலிருந்த வெடிகுண்டை தூக்கி ஜிம் பாண்டியன் மீது வீசினார்கள். ஆனால், அது கீழே விழுந்து வெடித்தது. திரும்பவும் விடாமல் விரட்டி சென்றனர் அந்த 6 பேரும்.. ஆனால் ஜிம் பாண்டியன் காம்பவுன் சுவர் மீது ஏறி குதித்து தப்பித்து குதித்துவிடலாம் என்று முயற்சி செய்தார்.

சுற்றி வளைப்பு
ஆனால், பக்கத்து பில்டிங்குக்கும், காம்பவுண்ட் சுவருக்கும் நடுவுல இருக்கும் சந்தில் விழுந்துவிட்டார். இதனால், அந்த கும்பல் சந்துக்குள்ளேயே ஜிம் பாண்டியனை சுற்றிவளைத்து கொண்டது. அதனால் எந்த பக்கமும் ஓட முடியாமல் தவித்த ஜிம் பாண்டியனை அரிவாளால் வெட்டியது. தலைதுண்டாக தொங்கிவிட்டது.. இதை பார்த்த பிறகுதான் அந்த கும்பல் தப்பி ஓடியது.

முன்விரோதம்
தகவலறிந்து புதுவை போலீசார் விசாரணை ஆரம்பித்தனர். 2-வது நாளாக இன்றும் விசாரணை நீடிக்கிறது. இப்போது, கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைத்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் அஸ்வின்.. இவருக்கும் ஜிம் பாண்டியனுக்கும் முன்பகை இருந்துள்ளதாக தெரிகிறது.

தேடுதல் வேட்டை
போன தீபாவளி அன்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்தளாக கூறப்படுகிறது. இதனால் அஸ்வின் கூட்டாளிகள்தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்பது தற்போது தெரியவந்துள்ளதால், கொலையாளிகளை மிக தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். அஸ்வின் பிடிபட்டால்தான் கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications