ரூ.500.. அக்கவுண்ட்டில் பணத்தை போட்டு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர்.. குஷியில் துள்ளி மகிழும் மக்கள்
புதுச்சேரி: புதுச்சேரி ரங்கசாமி மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ளார்.. இது புதுச்சேரி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பொறுத்தவரை எதையும் பக்காவாக பிளான் செய்து கொண்டுதான் களத்தில் குதிப்பார்.. எனினும் நிகழ்கால "கூட்டணி" அரசியலில், சற்று தள்ளாடுவதாகவே சொல்லகிறார்கள்..

கூட்டணி கட்சி: பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் வலுவாகவே உள்ளதாக முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் அடிக்கடி சொன்னாலும், ஏதோ சில மனவருத்தங்கள், கூட்டணியுடன் ரங்கசாமிக்கு இருக்கத்தான் செய்கின்றன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
காரணம், பாஜக கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருக்கும் ரங்கசாமி, ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே "மாநில அந்தஸ்து" இல்லாததால் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாராம்.. மேலும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னரே, புதுவையின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், கோப்புகளிலும்கூட, அவரே அனைத்து முடிவுகளையும் எடுப்பதால், இது ரங்கசாமிக்கு எரிச்சலை தந்துவருவதாகவும் செய்திகள் அவ்வப்போது கசிந்தபடியே வருகின்றன.
ராஜினாமா: இதற்குநடுவே, "ஆள்வதற்கு தகுதியில்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு வெளியே போகட்டுமே" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் கொந்தளிப்பதால், புதுச்சேரி அரசியலில் எப்போதுமே ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.
அரசியல்ரீதியான கருத்துக்கள் இவ்வாறிருந்தாலும், முதல்வராக ரங்கசாமியின் செயல்பாடுகள் மக்களை கவர்ந்தபடியே உள்ளன.. புதுச்சேரியில் ஆதி திராவிட, பழங்குடியின மக்களுக்கான நிதியுதவி ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டதாக சமீபத்தில்கூட, ரங்கசாமி தன்னுடைய மாநில மக்களுக்கு சர்ப்ரைஸ் தந்திருந்தார்.
பொங்கல் பண்டிகை: வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் என்றாலே, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்குவது வழக்கம்..
ஆனால், இந்த நடைமுறையை ரங்கசாமி மாற்றியுள்ளார்.. வேட்டி, சேலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500, வரும் தீபாவளி முதல் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டு அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்" என்று அறிவித்திருந்தார்.
அறிவிப்பு: இப்போதும், தமிழகத்தை போலவே புதுச்சேரி மாநிலத்திலும், இந்த வருட பொங்கல் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, இந்த வருடம், புதுவை மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 53 ஆயிரத்து 249 ரேஷன் கார்டுகளுக்கு, அரிசி, வெல்லம் போன்ற பொங்கல் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
மேலும், இந்த தொகையானது, பொங்கலுக்கு முன்பாக அனைவரது வங்கிக் கணக்கிலும் பணத்தை வரவு வைக்க புதுவை அரசு திட்டமிட்டிருக்கிறதாம்..
சர்ப்ரைஸ்: ஏற்கனவே, சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச துணிக்கு பதிலாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், இப்போது, பொங்கல் பண்டிகைக்கு 500 ரூபாய் பணமும் வழங்கப்படுவது, அம்மாநில மக்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதுமட்டுமல்ல, விரைவில் தேர்தல் வரும் சூழலில், ரங்கசாமியின் இந்த அதிரடிகளானது, மிகுந்த பலனை ஆளும்கட்சிக்கு ஏற்படுத்தி தரும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications