திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் சனி மகாபிரதோஷ பூஜை
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத தேய்பிறை சனி மகாபிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் கார்த்திகை மாத தேய்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மகா தீபாராதனை நடைபெற்றது.

மஞ்சள், பால், தயிர், சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷ பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ ல ஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சிவனை வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications