10 வயது சிறுமிக்கு சாக்கெட் கொடுத்து சில்மிஷம்.. 50 வயது முதியவருக்கு தர்ம அடி

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: 10 வயது சிறுமிக்கு சாக்கெட் கொடுத்து பாலியல் சில்மிஷம் செய்த 50 வயது முதியவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி தென்றல் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜஸ்தானை சேர்ந்த ஜெகதீஷ் (50). இவர் தென்றல் நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு ஜெகதீஷ் சாக்லேட் வாங்கி கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

pudhucherry: 10 year old Child sexual abuse by 50 year man

சிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதனிடையே சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை அவரது பெற்றோரிடம் இன்று கூறியுள்ளார்.

pudhucherry: 10 year old Child sexual abuse by 50 year man

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினருடன் சென்று முதியவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உண்மை என முதியவர் ஜெகதீஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.

pudhucherry: 10 year old Child sexual abuse by 50 year man

இதையடுத்து ஜெகதீஷை பிடித்து தர்ம அடி கொடுத்து தன்வந்திரி காவல் நிலையத்தில் பொதுமக்கள்ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+