மெல்ல வீசிய சாரல்.. புதுச்சேரியில் திடீர் மழை.. சுற்றுலா பயணிகள் செம ஹேப்பி பாஸ்!
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் மார்கழி மாதம் முடிந்த பிறகும் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மேலும் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரி நகரப் பகுதிகளான லெனின் வீதி, அண்ணா சாலை, நேரு வீதி, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிளான மடுகரை, திருக்கனூர், காலாப்பட்டு, கன்னியகோவில் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இந்த திடீர் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளும் கடற்கரை சாலை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சாரல் மழையில் நனைந்தபடியே செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் வந்த இந்த மழையால் புதுச்சேரியே ஜில்லாக மாறிக் காணப்படுகிறது.

அதேசமயம், சென்னையில் மழை வருமோ என்பது போன்ற கிளைமேட் நிலவுகிறது. வெயில் குறைந்து மோடமாக காணப்படுவதால் மக்கள் வானத்தைப் பார்த்தபடி காத்திருக்கின்றனர்.. மழை முத்தம் பெறுவதற்காக.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications