புதுவையில் மீண்டும் ரங்கசாமி ஆட்சி.. மண்ணை கவ்விய இந்தியா கூட்டணி! விஜய் கட்சி 3 இடத்தில் வெற்றி

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுவை சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் மீண்டும் ரங்கசாமியே முதல்வர் ஆக உள்ளார். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 18 இடங்களில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விஜய்யின் தவெக 3 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுவையில் முதல்வராக ரங்கசாமி உள்ளார். தேசிய ஜனநாயாக கூட்டணி ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது. 2026 தேர்தலிலும் என்.ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் - காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே மல்யுத்தம் நடந்தது. புதுவையில் மொத்தம் 91.23 வாக்குகள் பதிவானது.

Puducherry Assembly Election Results 2026 Vote Counting News and Constituency Wise Winners List

மீண்டும் என் டி ஏ கூட்டணி ஆட்சி

தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது. புதுச்சேரியில் 23 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் லாஸ்பேட்டை மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி, நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்திலும், மாகியில் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் அரசு கலைக்கல்லூரியிலும் வைக்கப்பட்டு இருந்தது. இந்த மையங்களில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. இதில் என்.டி.ஏ கூட்டணி 22 இடங்களில் முன்னிலை பெற்றது. இந்தியா கூட்டணி 6 இடங்களிலும் முன்னிலை பெற்றது. விஜய்யின் தவெக ஒரு இடங்களில் கூட முன்னிலை பெறமால் இருந்தது.

மீண்டும் ரங்கசாமி ஆட்சி

இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரக்ங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதிலும் என்.டி.ஏ கூட்டணியே முன்னிலை பெற்றது. புதுவை சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 19 இடங்களில் முன்னிலை பெற்றது. இந்தியா கூட்டணி 8 இடங்களிலும் முன்னிலை பெற்றது. விஜய்யின் தவெக ஒரு இடங்களில் கூட முன்னிலை பெறாமல் இருந்தது.

ஆனால் இறுதியில் என்.டி.ஏ கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய்யின் தவெக மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல்:

புதுச்சேரி 2026 சட்டமன்ற தொகுதி வெற்றி விவரம் (30):

N.R காங்கிரஸ் - 12 தொகுதிகள்

1. தட்டாஞ்சாவடி
2. வில்லியனூர்
3. லாஸ்பேட்டை
4. முத்தியால்பேட்டை
5. அரியாங்குப்பம்
6. எம்பலம்
7. நெட்டப்பக்கம்
8. காரைக்கால் வடக்கு
9. ஏனம்
10. மங்கலம்
11. ஊழவர்கரை
12. இந்திரா நகர்

பாஜக - 4 தொகுதிகள்

1. மண்ணாடிப்பட்டு
2. நிரவி திருப்பட்டினம்
3. முதலியார்பேட்டை
4. திருநள்ளாறு

LJK - 1 தொகுதி

1. காமராஜ் நகர்

அதிமுக - 1 தொகுதி

1. உப்பளம்


திமுக - 5 தொகுதிகள்

1. நெல்லித்தோப்பு
2. காலாப்பட்டு
3. ராஜபவன்
4. பாகூர்
5. காரை தெற்கு

காங்கிரஸ் - 1 தொகுதி

1. ஓசுடு

TVK - 3 தொகுதிகள்

1. மணவெளி
2. உருளையன்பேட்டை
3. திருபுவனை

சுயேச்சை - 3 தொகுதிகள்

1. கதிர்காமம்
2. நெங்காடு
3. மாஹே

விஜய் கட்சி 3 இடங்களில் வெற்றி

புதுவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 16 தொகுதிகளில் வெல்வது அவசியம். புதுவையில் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் ரங்கசாமியே மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். காங்கிரஸ் - திமுக கூட்டணி படு தோல்வியை சந்தித்து உள்ளது.

விஜய்யின் தவெக புதுவையிலும் ஏதேனும் ஆச்சர்யம் கொடுக்குமா? என்ற எதிர்ப்பாப்பு புதுவை மக்களிடையே நிலவிய நிலையில் அங்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது தேர்தல் முடிவுகள். எனினும் இறுதியில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது அக்கட்சிக்கு சற்று ஆறுதலை கொடுத்து இருக்கும். அதே நேரத்தில் தமிழகத்தை போலவே புதுவையில் ஒரு சீட்டில் கூட நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை.

4 முனை போட்டி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் சுமார் 9.50 லட்சம் (9,50,311) வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இதுவரை இல்லாத அளவாக 91.23 சதவீதம் வாக்குகள் பதிவானது.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக, அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி மற்றொரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி மற்றும் புதியாக களத்தில் நிற்கும் விஜய்யின் த.வெ.க. - நேயம் மக்கள் கழகம் ஒரு அணி என 4 முனை போட்டி நிலவியது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க மற்றும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க தலா 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 17, திமுக 13 தொகுதிகளிலும், விசிக 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. சில தொகுதிகளில் காங்கிரஸும் தி.மு.க-வும் நேரடியாக மோதின. 28 தொகுதிகளில் தனித்துக் களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம், இரண்டு தொகுதிகளில் கூட்டணிக்கு ஒதுக்கியது. நாம் தமிழரும் 30 தொகுதிகளில் தனித்து களமிறங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+