16 வயசுல இருந்து பழக்கம்.. ஆனா இப்போ டார்ச்சர் செய்யுறாங்க! பாஜக எம்எல்ஏ மீது இளம்பெண் பரபர புகார்
புதுச்சேரி: பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரத்தின் முதல் மனைவி நான்தான் என்றும் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி இளம்பெண் ஒருவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் வந்து புதுவை காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம்தான் தன்னுடைய கணவர் என்று கூறியுள்ளார். இவருக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமான நிலையில் தற்போது மற்றொரு பெண் அவரை சொந்தம் கொண்டாடுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளிக்க வந்த பெண், "கல்யாணசுந்தரம் என்னை ஏமாற்றிவிட்டார் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஆனால் புதுவை காவல்துறையினர் புகாரை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து புகார் அளிக்க வந்த பெண் கூறியதாவது, "எனக்கு 16 வயது இருக்கும்போதிலிருந்து கல்யாணசுந்தரத்தை நன்றாக தெரியும். அவர் வாகன உதிரிபாக விற்பனை கடை வைத்திருந்தார். எனவே பொருட்கள் வாங்க அடிக்கடி சென்னைக்கு வருவதுண்டு. இவர் பொருட்கள் வாங்கும் கடைக்கு பக்கத்தில் இருந்த டைப் ரைட்டிங் சென்டரில்தான் நான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கும் இவருக்கும் பழக்கமானது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் அவர் வீட்டில் விஷயம் தெரிய வந்தது. ஆனால் வீட்டில் யாரும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. திருமணத்திற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே அவர் வடபழனி முருகன் கோயிலில் வைத்து என்னை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி நடந்தது. இதற்கு அவருடைய நண்பர்கள்தான் சாட்சி. இதற்கு ஆதாரமாக போட்டோக்கள் இருக்கிறது. உறவினர்கள் யாரும் இல்லாமல் திருமணம் நடந்தாலும் அவர் என்னை நன்றாக கவனித்து வந்தார். கோரிமேடு கலைவாணர் நகர் பகுதியில் என்னை வீடு எடுத்து தங்க வைத்தார்.
இதன் பின்னர் 1.5 ஆண்டுகள் கழித்து எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பராமரித்துக்கொள்ள நான் சென்னையில் உள்ள தாய் வீட்டில் இருந்தேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட கல்யாணசுந்திரத்தின் உறவினர்கள் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துவிட்டனர். தொடக்கத்தில் இந்த விஷயம் எனக்கு தெரியாது. ஆனால் சில மாதங்களில் உண்மை தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, என்னை கைவிட மாட்டேன் என்று அவர் கூறி நம்பிக்கை கொடுத்தார். எனவே நானும் இதனை பிரச்னையாக்கவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து எங்களுக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த காலகட்டங்களில் வீட்டு வாடகைக்கும், உணவுக்கும் என மாதம் மாதம் ரூ.20 -25 ஆயிரம் அனுப்பிக்கொண்டிருந்தார். ஆனால் இதற்கிடையில் இரண்டாவது மனைவி எனக்கு போன் செய்து சரமாரியாக திட்டினார். இனி கல்யாணசுந்தரத்திடம் பேச கூடாது என்று சொன்னார். அதன் பின்னர் எனக்கும் எனது குழந்தைக்கும் கிடைத்து வந்த ஊதியம் முற்றிலுமாக நின்று போனது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு என்னால் இதற்கு அப்புறம் எந்த உதவியும் செய்ய முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். தேவையில்லாமல் ஏதாவது செய்தால் ஆளை வைத்து காலி செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. காவல்துறையில் புகார் அளித்தாலும் ஏற்றுக்கொள்ளவில்லை" என்று கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். இந்த சம்பவம் புதுவையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications