புதுச்சேரி பாஜக புதிய தலைவர் இவர்தானா? டெல்லிக்கு பறந்த 3 பேர் லிஸ்ட்! ரேஸில் யார் யார்?

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் பதவிக்கு வரும் 30 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. புதுச்சேரி பாஜக தலைவர் பதவிக்கு 3 பேர் பெயர்கள் பாஜக மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோரின் பெயர்கள் பாஜக டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Puducherry bjp

பாஜக தலைவர்

அகில இந்திய அளவில் பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களிலும் பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் புதிய மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநில தலைவரை தேர்வு செய்யும் பணி இழுபறியாக நீடிக்கிறது. தலைவர் பதவிக்கான போட்டியில் பலரும் இறங்கியதால் தலைவரை தேர்வு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என பாஜக அகில இந்திய தலைமை முடிவு செய்தது.

புதுச்சேரி பாஜக

சில நாட்கள் முன்பு புதுச்சேரி மாநில பாஜக மையக்குழு மேலிட பொறுப்பாளர் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா இன்று மீண்டும் புதுச்சேரிக்கு வந்தார். ஹோட்டல் அக்கார்டில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகளை சந்தித்து சுரானா ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், வரும் 29 ஆம் தேதி புதுச்சேரி மாநில பாஜக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கலும் 30 ஆம் தேதி தேர்தலும் நடைபெறும் என தெரிகிறது. ஒருவர் மட்டுமே தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்வார் என்பதால் மறுநாள் 30 ஆம் தேதி புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

அமைச்சர், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

இந்நிலையில், புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ-க்கள் வெங்கடேசன், அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோரையும் அமைச்சர் சாய் சரவண குமாரையும் நிர்மல் குமார் சுரானா ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து பாஜக நியமன எம்.எல்.ஏ-க்கள் வெங்கடேசன், அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோர் இன்று சபாநாயகர் செல்வத்திடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். பாஜகவை சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமாரும் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜிமா செய்தார்.

சாய் சரவண குமாருக்கு பதிலாக அமைச்சரவையில் பாஜக எம்.எல்.ஏ ஜான் குமாருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியமன எம்.எல்.ஏக்களாக 3 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

அடுத்த தலைவர் யார்?

தற்போது பாஜக தலைவராக இருக்கும் செல்வகணபதிக்கு பதிலாக அந்த பதவியை பெற அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சாய் சரவண குமார் முயல்வதாக தகவல்கள் பரபரக்கின்றன. நியமன எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வி.பி.ராமலிங்கம் பாஜக மாநில தலைவர் பதவியை பெற கடுமையாக முயற்சி செய்து வருகிறார். உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய நமச்சிவாயமும் பாஜக மாநில தலைவர் பதவிக்கு முட்டி மோதுகிறார்.

புதுச்சேரி பாஜக தலைவர் பதவிக்கு 3 பேர் பெயர்கள் பாஜக மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோரின் பெயர்கள் பாஜக டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 29 ஆம் தேதி இவர்களில் ஒருவர் மனு தாக்கல் செய்வார் என்றும், 30 ஆம் தேதி புதுச்சேரி பாஜக தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+