கவனிச்சீங்களா? பழைய அம்பாசிடர் காருக்குள் யார் பாருங்க.. ரங்கசாமிக்கு சந்தோஷம்.. புதுச்சேரியில் செம

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம் தெரியுமா?

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் அரசியலை பொறுத்தவரை எதையும் பக்காவாக பிளான் செய்து கொண்டுதான் களத்தில் குதிப்பார்.. ஆனாலும், நிகழ்கால "கூட்டணி" அரசியலில், லேசாக தள்ளாடுவதாகவே செய்திகள் கூறுகின்றன.

Puducherry chief minister Rangasamy and His Special Old Ambassador Car enjoying sitting in the Front of the seat

சர்ப்ரைஸ்: அரசியல்ரீதியான அதிருப்திகள் ஒருபக்கம் இருந்தாலும், முதல்வராக ரங்கசாமியின் செயல்பாடுகள் மக்களை கவர்ந்தபடியே வந்திருக்கின்றன.. புதுச்சேரியில் ஆதி திராவிட, பழங்குடியின மக்களுக்கான நிதியுதவி ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டதாக அறிவித்து சில மாதங்களுக்கு முன்புகூட ரங்கசாமி சர்ப்ரைஸ் தந்திருந்தார்.

அதேபோல, தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் என்றாலே, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்குவது வழக்கம்.. ஆனால், இந்த நடைமுறையை மாற்றிய ரங்கசாமி, வேட்டி, சேலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500, வரும் தீபாவளி முதல் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டு அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்" என்று அறிவித்து இன்னொரு சர்ப்ரைஸ் தந்திருந்ததை மறுக்க முடியாது.

வாகனங்கள்: இப்படிப்பட்ட சூழலில், ரங்கசாமி பற்றின ஒரு செய்தி, கடந்த 2 நாட்களாகவே மீடியாவில் வட்டமிட்டு வருகிறது.. ரங்கசாமி எப்போதுமே வாகனங்களை ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள் என்றால் ரங்கசாமிக்கு அலாதி பிரியமாம்.

Puducherry chief minister Rangasamy and His Special Old Ambassador Car enjoying sitting in the Front of the seat

தன்னுடைய பைக்குகள் பழையதாகிவிட்டாலும் விடமாட்டார். எப்படியாவது ரிப்பேர் செய்து வைத்து கொள்வார்.. இப்படித்தான், கடந்த மார்ச் மாதம் பழைய மோட்டார் சைக்கிளை (யமகா ஆர்.எக்ஸ். 100) புதுப்பித்து கொண்டார். அதுமட்டுமல்ல, அந்த பைக்கில்தான், கடந்த மாதம் லோக்சபா தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக வாக்குச்சாவடிக்குக்கு சென்றார்..

அம்பாசிடர்: இப்போது, கார்கள் மீதும் ரங்கசாமியின் கவனம் விழுந்துள்ளது.. முதன்முதலில் அதாவது கடந்த 1997-ம் ஆண்டு, முதன்முதலில் அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்தார் ரங்கசாமி.. இதற்கு பிறகு, நிறைய புது மாடல் கார்களை வாங்கி பயன்படுத்தி விட்டார்.. ஆனாலும், அந்த பழைய அம்பாசிடர் காரை தன்னுடைய வீட்டிலேயே நிறுத்தி வைத்திருந்தாரே தவிர, சரியாக பயன்படுத்வில்லை.

இதனால் அந்த கார் ரொம்ப மோசமாகவிட்டது.. எனவே பழுதாகிப்போன காரை விட்டுவிடுவதற்கு ரங்கசாமிக்கு மனசே இல்லை.. அந்த காரை தூக்கி தூரப்போடவும் மனசில்லை .. அந்த காரை விற்கவும் மனசில்லை.. அங்கிருந்து அப்புறப்படுத்தவும் மனசில்லை.. இதற்கு பேசாமல் அந்த காரை புதுப்பித்துவிடலாம் என்று முடிவு செய்தார்.

பழைய கார்: அதன்படியே, தூத்துக்குடியில் உள்ள ஒரு பணிமனைக்கு, சில மாதங்களுக்கு முன்பு, அந்த காரை கொண்டுபோய் விட்டார். அந்த பழைய அம்பாசிடர் கார் இப்போது முழுமையாக பழுது பார்க்கப்பட்டுவிட்டதாம்.. தூத்துக்குடியிலிருந்து, நேராக ரங்கசாமி வீட்டிற்கே கொண்டுவந்து விட்டார்கள்.. அந்த காரை பார்த்ததுமே ரங்கசாமிக்கு ஒரே குஷி.

அம்பாசிடர் காரையே சுற்றி சுற்றி வந்து பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.. பிறகு, காரின் முன்பக்க சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.. அப்போது முகமெல்லாம் பூரிப்பு ரங்கசாமிக்கு..

பூரிப்பு: முதல்வர் ரங்கசாமி முதன் முதலில் வாங்கிய தன்னுடைய பழைய அம்பாசிடர் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு பூரித்த இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இனிமேல் உள்ளூரில் இந்த அம்பாசிடர் காரை பயன்படுத்த போகிறாராம் ரங்கசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+