புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியா இது.. விஜய் பாணி முதல் புஷ்பா பாணி வரை.. அசர வைத்த நிர்வாகிகள்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி முழுவதும் முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள்... கடவுள் முதல் நடிகர், விளையாட்டு வீரர் வரை பல்வேறு கெட்டப்புகளில் கட்அவுட்கள் வைத்து அசத்தியுள்ளனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஐந்தாவது முறையாக அரியணையில் ஏறியுள்ள ரங்கசாமியை வாழ்த்தி விதவிதமாக கட் அவுட் மற்றும் பேனர்கள் வைத்துள்ளனர். நம்மூரில் இப்படியான பேனர்களை எல்லாம் முன்பு மதுரையில் தான் பார்க்க முடியும். இப்போது மதுரையில் மட்டுமின்றி எங்குமே பெரிய அளவில் பார்க்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு கட்டுப்பாடுகள் அதிகமாகிவிட்டது.

புதுச்சேரியில் முதல்வராக ஐந்தாவது முறையாக ரங்கசாமி அரியணையில் ஏறியுள்ளார். கடந்த 2001 - 2006 வரை காங்கிரஸ் சார்பிலும், 2006 முதல் 2008 வரை மீண்டும் காங்கிரஸ் சார்பிலும் முதல்வராக இருந்தார் ரங்கசாமி. ஆனால் காங்கிரசில் அவரது பதவி 2008ம் ஆண்டு பறிக்கப்பட்டது. இதையடுத்து அவர் என்ஆர் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியை தொடங்கினார். அந்த கட்சி சார்பாக 2011ல் புதுச்சேரி முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றார். அதன்பிறகு 2021 - 2026 முதல் வரை 4வது முறையாக ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். ஐந்தாவது முறையாக 2026ல் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

Puducherry Chief Minister Rangasamy banner Photos that captivated the public

புதுச்சேரி யூனியன் பிரதேச வரலாற்றில் ஐந்து முறை முதல்வராகி உள்ளது ரங்கசாமி மட்டுமே.. ரங்கசாமிக்கு தனிப்பட்ட செல்வாக்கு புதுச்சேரியில் அதிகம். அவரது ஆதரவாளர்கள் அவரது பிறந்த நாள் வரும் போது, அசத்திவிடுவார்கள். விதவிதமான பேனர்கள், நலத்திட்ட உதவிகள் என்று புதுசேரியை திருவிழாவாக மாற்றிவிடுவார்கள்.

Puducherry Chief Minister Rangasamy banner Photos that captivated the public

அந்த வகையில் முதலமைச்சர் ரங்கசாமியின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி முழுவதும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் பல்வேறு வடிவிலான வாழ்த்து பேனர்கள் மற்றும் கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி 76 வயதை நிறைவு செய்து 77-வது வயதில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Puducherry Chief Minister Rangasamy banner Photos that captivated the public

இந்த பேனர்களில், முருகப்பெருமான் தோற்றம், நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோரின் தோற்றம், புஷ்பா-2 திரைப்படக் கதாபாத்திர பாணி, விளையாட்டு வீரர் உள்ளிட்ட பல்வேறு கற்பனை வடிவங்களில் முதலமைச்சர் ரங்கசாமியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கையை அரைக்கும் காட்சியை ஒத்த வடிவமைப்பிலும் சில பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Puducherry Chief Minister Rangasamy banner Photos that captivated the public

இந்த வித்தியாசமான பேனர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் பேனர் தொடர்பான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இதுபோன்ற பேனர்கள் மற்றும் கட்அவுட்கள் வைக்கப்படுவது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Puducherry Chief Minister Rangasamy banner Photos that captivated the public

குறிப்பாக சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி விபத்துகளுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Puducherry Chief Minister Rangasamy banner Photos that captivated the public

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேனர் விதிமுறைகளை அதிகாரிகள் முறையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Puducherry Chief Minister Rangasamy banner Photos that captivated the public
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+