அதெப்படி திமுகவுக்கு 13 சீட் கொடுக்கலாம்? புதுவை காங்கிரஸில் போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் வெடித்துள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் களமானது ஒவ்வொரு கட்சிக்கும் ரணகளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. என்.ஆர். காங்கிரஸ்- அதிமுக- பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு 3 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டது.

Puducherry Congress Opposes to 13 seats for DMK

இதற்கு அதிமுகவில் கடும் அதிருப்தி நிலவுகிறது. புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? என்ற நிலை இருந்தது. பின்னர் இரு கட்சி மேலிடங்களும் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டது. திமுகவுக்கு 13 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் திமுகவுக்கு 13 தொகுதிகளை ஒதுக்கியதற்கு காங்கிரஸில் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அக்கட்சி நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+