சபாஷ்.. விவசாயிகளை தேடி தேடி செல்லும் டாக்டர்கள்.. என்ன காரணம்?.. புதுச்சேரி அரசின் சூப்பர் முயற்சி..!
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மிக சிறப்பான ஒரு காரியத்தை செய்துள்ளது.. அதாவது, கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தேடி தேடி பிடித்து, அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துகிறார்கள்.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு வரை புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.. ஆரம்பத்தில் குறைவாக இருந்த உயிரிழப்பு, படிப்படியாக அதிகரித்து மே 23ம் தேதி உச்சத்தில் இருந்தது...
அன்றைய தினம் அதிகபட்சமாக 34 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்தனர். இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள ஆரம்பித்த பிறகு, படிப்படியாக தொற்று குறைய ஆரம்பித்துள்ளது.

பாதிப்பு
இதனால், உயிரிழப்பு இல்லை என்ற நிலைமை 3 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் ஏற்பட துவங்கியது.. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் கொரோனா குறைந்து வருவதால் வரும் 16ம் தேதி முதல் முதற்கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

சிகிச்சை
அதேசமயம், தொற்றை முழுவீச்சில் கட்டுப்படுத்த சுகாதார துறையினர் களமிறங்கி உள்ளனர்.. நேற்று 4214 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. இதில் 81 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.. 171 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.. இப்போதைக்கு 246 பேர் மருத்துவமனையிலும், 1167 பேர் வீட்டு தனிமையிலும் என 1413 பேர் சிகிச்சையில் உள்ளனர்..

தீவிரம்
இதனிடையே, 5லட்சத்து 93 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்... ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் எல்லாருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணியைதான் தற்போது தீவிரமாக கையில் எடுத்துள்ளது.. இதன் ஒருபகுதியாகத்தான் விவசாயிகளை தேடி டாக்டர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளை தேடி சென்று தடுப்பூசி போடும் முகாம் துவங்கி உள்ளது..

டாக்டர்கள்
சந்தை புதுகுப்பம் பகுதியில் 100 நாள் வேலை செய்துவரும் விவசாயிகளுக்கு காட்டேரிக்குப்பம் சுகாதார நிலைய டாக்டர்கள் தடுப்பூசியை செலுத்தினார்கள்.. 200க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.., எல்லாரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும், இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே, இந்த டாக்டர்கள் விவசாயிகளுக்கு ஊசி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications