என்ன வேண்டுமோ சாப்பிடுங்க! தூய்மை பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுத்த திமுக எம்.எல்.ஏ!
தூய்மைப் பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுத்த திமுக எம்.எல்.ஏ. சம்பத்.
புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. சம்பத், தனது பிறந்தநாளை ஒட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுத்திருக்கிறார்.
Buffet முறையில் வேண்டும் என்பதை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் இந்த விருந்து இருந்தது.
விருந்து கொடுத்தது மட்டுமன்றி பெண் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் சேலை ஒன்றையும் பிறந்தநாள் பரிசாக கொடுத்தார் திமுக எம்.எல்.ஏ. சம்பத்.

புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.
புதுச்சேரியில் முதலியார்பேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சம்பத். இவர் புதுச்சேரி அரசியலிலும், புதுச்சேரி திமுகவிலும் கிடுகிடுவென வளர்ந்து வரும் பிரமுகராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய சம்பத் எம்.எல்.ஏ., தனது தொகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு சிறப்பு விருந்து ஒன்று கொடுக்க திட்டமிட்டார்.

மெனு கார்டு
அதன்படி தனது தொகுதியை சேர்ந்த அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் அழைத்துக் கொண்டு புதுச்சேரியில் உள்ள பிரபல நட்சத்திர உணவகத்துக்கு சென்ற அவர், என்ன வேண்டுமோ கூச்சப்படாமல் வாங்கி சாப்பிடுங்க என Buffet முறையிலான விருந்தை துவக்கி வைத்தார். மெனுவில் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, உள்ளிட்ட ஏராளமான சைவ, அசைவ கிரேவி வகைகள் இடம்பெற்றிருந்தன.

தூய்மைப் பணியாளர்கள் வாழ்த்து
தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து பரிமாறிய கையோடு தானும் ஒரு தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டு போய் அவர்கள் மத்தியில் அமர்ந்து சாப்பிட்டார் திமுக எம்.எல்.ஏ. சம்பத். அதேபோல் விருந்து முடிந்ததும் தூய்மைப் பணியாளர்களுக்கு சேலையை பரிசாக கொடுத்து வழியனுப்பி வைத்தார். இதனால் திக்குமுக்காடி போன தூய்மைப் பணியாளர்கள் சம்பத் எம்.எல்.ஏ.வை வாழ்த்தியபடி புறப்பட்டனர்.

புதுச்சேரி சிவா
திமுக எம்.எல்.ஏ. சம்பத் நடத்திய பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்?












Click it and Unblock the Notifications