திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் யார் அதிக இடங்களில் போட்டியிடுவது என்பதில் கருத்து மோதல் நிலவி வரும் சூழலில் இன்று பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு போன்றவற்றில் முனைப்பு காட்டி வருகின்றன.

தமிழ்நாட்டில் பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளது திமுக. திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு நீண்ட இழுபறிக்கு பிறகு ஒருவழியாக நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை எம்.பி.யும் திமுக அளித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் யார் தலைமையில் கூட்டணி என்று திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவுகிறது. புதுச்சேரியில் கடந்த தேர்தலைப்போல அதிக தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. அங்கு 18 - 20 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் முனைப்பு காட்டுகிறது. ஆனால், அங்கு 6 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக தங்கள் தலைமையிலே கூட்டணி அமைய வேண்டும் எனக் கூறி வருகிறது.
இதனால் 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் கூட்டணிக்கான தலைமை யார் என்பதிலும், யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதிலும் தொடர்ந்து இரு கட்சிகள் இடையே மோதல் நீடித்து வருகிறது. கடந்த 2021 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 15 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதன் காரணமாக புதுச்சேரியில், திமுக தலைமையிலேயே கூட்டணி தொடரும் என திமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 14 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 இடத்திலும் போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இல்லாமல் தனியாக 1 இடத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த ஏழு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் கூட்டணி என்பதுபோல புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதுதான் வழக்கம் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. திமுக தரப்பில் புதுச்சேரி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, மாநில அமைப்பாளர் சிவா, அவைத் தலைவர் எஸ்பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.
காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சீட் பங்கீட்டில் இரு கட்சிகளும் தீவிரமாக இருந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
ஒத்த சீட்டு வைகோ..கடுகடு கம்யூனிஸ்ட்கள்! விரக்தியில் விசிக திருமா! ஸ்டாலினுக்கு புது தலைவலி ஸ்டார்ட் -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
அடி தூள்! காலையில் கோரிக்கை.. மாலையே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. பத்திரிகையாளர் பென்ஷன் உயர்வு! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்!












Click it and Unblock the Notifications