புதுவையில் அடித்து தூக்கும் ரங்கசாமி! ஆட்சியை தக்க வைக்கும் என்டிஏ.. ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல்
சென்னை: புதுவை சட்டசபை தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி 40 சதவீத வாக்குகள் பெறும் என்றும், காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு 30 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் ஆக்சிஸ் மை எக்சிட் போல் கூறியுள்ளது.
எத்தனை தொகுதிகள் என்று பார்க்கும் போது, தேசிய ஜனநாயக கூட்டணி 16 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், இந்தியா கூட்டணி 6 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் விஜய்யின் தவெக 2 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்துள்ளது.

புதுவையில் மீண்டும் ரங்கசாமி ஆட்சி
புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி மொத்தம் உள்ள 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக அமைதியாக நடந்து முடிந்தது. இங்கு 91.23 சதவீதம் வாக்குப்பதிவானது. வாக்கு எண்ணிக்கை மே 4 ல் நடைபெறுகிறது. இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இதன்படி, ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில், புதுவை யூனியன் பிரதேசத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என கணித்துள்ளது. புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி 40 சதவீத வாக்குகள் பெறும்.. காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு 30 சதவீத வாக்குகள் கிடைக்கும்.. மற்ற கட்சிகளுக்கு 13 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று ஆக்ஸிஸ் மை இந்தியா கணித்துள்ளது.
எத்தனை தொகுதிகள் என்று பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணி 16 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், இந்தியா கூட்டணி 6 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் விஜய்யின் தவெக 2 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்துள்ளது.
ஆக்சிஸ் மை இந்தியா - புதுவை
* என்.ஆர். காங்கிரஸ் (என்.டி.ஏ): 16-20 (40 சதவீதம்)
* காங்கிரஸ்: 6-8 (30 சதவீதம்)
* டிவிகே: 2-4
புதுவை சட்டமன்ற தேர்தல்
வழக்கமாக தமிழகத்துடன் சேர்ந்தே புதுவை யூனியன் பிரதேசமும் தேர்தல்களை எதிர்கொள்ளும். ஆனால், இந்த முறை அந்த வழக்கத்தை, தேர்தல் ஆணையம் உடைத்திருப்பதால், முன்கூட்டியே தேர்தலைத் சந்தித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க மற்றும் லாட்டரி' ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க தலா 2 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.
தயங்கித் தயங்கி தமிழகத்தில் கைகோத்துக்கொண்ட காங்கிரஸும் தி.மு.க-வும், புதுச்சேரியில் பரஸ்பரம் காலை வாரிவிட்டுக் கொண்டன. அதனால் இருக்கு, ஆனால் இல்லை' என்ற அளவில்தான் அங்கு இந்தியா' கூட்டணி இருக்கிறது. காங்கிரஸ் 16 தொகுதிகளில் ஒன்றை இ.கம்யூனிஸ்ட்டுக்கும், தி.மு.க 14 தொகுதிகளில் ஒன்றை வி.சி.க-வுக்கும் கொடுக்க முடிவானது.
ஆனால், அதை மீறி 22 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களைக் களமிறக்கிய காங்கிரஸ், ஏனாம் தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு என்று டைவ்' அடித்தது. நொந்துபோன தி.மு.க., 13 தொகுதிகளை எடுத்துக்கொண்டு, வி.சி.க-வுக்கு ஒன்றை ஒதுக்கியது. அதனால் சில தொகுதிகளில் காங்கிரஸும் தி.மு.க-வும் நேரடியாக மோதுகின்றன. 28 தொகுதிகளில் தனித்துக் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகம், இரண்டு தொகுதிகளில் (உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி) கூட்டணிக் கட்சிக்கு ஆதரவு தந்துள்ளது. மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications