Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுவை சிறுமி பலாத்கார வழக்கு.. சீலிடப்பட்ட கவரில் பிரேத பரிசோதனை அறிக்கை.. போலீஸில் ஒப்படைப்பு

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுவையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் சீலிடப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து இன்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம், விசாரணை குழு அதிகாரி கலைவாணன் ஐபிஎஸ்ஸிடம் தாக்கல் செய்யப்பட்டது.

வட்டாட்சியர் தலைமையில் நடந்த பிரேத பரிசோதனை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. முதல் கட்டமான பிரேத பரிசோதனை அறிக்கை கடந்த 6ஆம் தேதியே வெளியானது. அதில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார் என்றும் அவருடைய பிறப்புறுப்பில் அதிக காயங்கள் இருந்ததாகவும் தெரியவந்தது.

Puducherry girl murder case Post mordem report of the girl handed over to police

இந்த நிலையில் சிறுமியின் முழு பிரேத பரிசோதனை அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம், முத்தியால்பேட்டை போலீஸில் தாக்கல் செய்தனர். சீலிடப்பட்ட உறையில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது சிறுமி கொலை வழக்கு விசாரணைஅதிகாரி கலைவாணன் ஐபிஎஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பது பின்னர் தெரியவரும்.

பின்னணி என்ன: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ஆம் தேதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த சிறுமியை காணவில்லை. பெற்றோரும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் சிறுமியை இன்னும் காணவில்லை என்பதால் அக்கம்பக்கம் தேடி பார்த்துள்ளனர்.

போலீஸில் புகார்: ஆனாலும் சிறுமி கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி எங்கோ நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து சிறுமியின் வீட்டுக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் ஒரு மூட்டை மிதப்பதாக தகவல் கிடைத்தது.

பிரேத பரிசோதனை: இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் இருந்தது. அந்த சடலத்தை தனது மகள் என சிறுமியின் தந்தை அடையாளம் காட்டினார். இதையடுத்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

பாலியல் பலாத்காரம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் அவருடைய பிறப்புறுப்பில் உள் காயங்கள் அதிகமாக இருப்பதும், அந்த உறுப்பில் தையல் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் உடல் கடந்த 7 ஆம் தேதி வைத்திக்குப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விவேகானந்தன் (54), கருணாஸ் (19) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாஸ், சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிதருவதாக கூறி விவேகானந்தனின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்துத்தான் இவர்கள் இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் 14 நாட்களுக்கு அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க நேர்மையான அதிகாரியான கலைவாணன் ஐபிஎஸ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. தமிழ் தெரிந்த அதிகாரி என்றால் மக்களுக்கு எளிதாக கருத்தை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதால் கலைவாணனை நியமித்துள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+