பஸ் கட்டணம் திடீர் உயர்வு.. 6 ஆண்டுகளுக்கு பின் அதிரடியாக உயர்த்திய புதுச்சேரி நிர்வாகம்.. முழு விபரம்
புதுச்சேரி: புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் 6 ஆண்டுகளுக்குப் பின் பேருந்துக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ரூ.2 முதல் அதிகபட்சமாக ரூ.8 வரை கட்டணம் என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உள்ளது.

புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து கழகம் சார்பில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, யானம் உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழகத்துக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் 6 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் ஒப்புதலின்பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சமாக 8 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது ஏசி வசதி இல்லாத டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி டவுன் பஸ்களில் குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.13 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் ஏசி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.36ல் இருந்து ரூ.47 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின்மூலம் புதுச்சேரி - கடலூர் பஸ் கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் புதுச்சேரி மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட உள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications