பாஜக கோரிக்கையை ஏற்று.. "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்திற்கு வரிச்சலுகை! புதுச்சேரி அரசு அறிவிப்பு
புதுச்சேரி: பாலிவுட் திரைப்படமான "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்".

1980, 1990களில் காஷ்மீர் கிளர்ச்சி சமயத்தில் காஷ்மீர் இருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகள் பின்னணியை இது மையமாகக் கொண்டதாகும்.
இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்திற்கு அரியானா, மத்தியப் பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகண்ட், ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்கள் வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்து வருகின்றன.
அதேநேரம் மறுபுறம் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இந்தப் படத்தை விமர்சிக்கும் வகையிலேயே அணுகி வருகின்றன. இது பிரசார படம் என்றே பலரும் சாடியுள்ளனர்.
இதற்கிடையே இந்த திரைப்படத்திற்கு பாஜகவினர் வரிச்சலுகை அளிக்கவேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications