அதிர வைக்கும் நரிக்குறவர்கள்.. மரங்களில் விஷம் தடவி.. அணில் வேட்டை.. மக்களே உஷார்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாதளங்களில் மரங்களில் விஷம் தடவி அணிலை வேட்டையாடும் நரிக்குறவர்கள்... குழந்தைகளுக்கு காத்திருக்கும் பேராபத்து... அதிர வைக்கும் தகவல்கள் தொடர்ந்து படியுங்கள்.

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர்.

puducherry gypsies hunt squirrels in a dangerous way

அதுமட்டுல்லாமல் புதுச்சேரியை சேர்ந்த உள்ளூர் வாசிகளும் தங்களுடைய குடும்பத்தோடு கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு ஆர்வத்துடன் செல்வது வழக்கம்.

puducherry gypsies hunt squirrels in a dangerous way

இப்படி பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் புதுச்சேரியில் சமீப காலமாக நரிக்குறவர்கள் சிலர் கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றியுள்ள மரங்களில் விஷத்தை தடவி அணில்களை உணவுக்காக வேட்டையாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரங்களுக்கு கீழே அணில்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்து கிடப்பதை தினந்தோறும் காண முடிகிறது.

puducherry gypsies hunt squirrels in a dangerous way

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பொதுவாக சுற்றுலா தளங்களுக்கு வருபவர்கள் மரத்திற்கு அடியில் நிழலுக்காக தங்களுடைய குடும்பத்தோடு அமருவது வழக்கம். அப்படி அமரும்போது அவர்களுடைய குழந்தைகள் மரத்தை சுற்றி விளையாடுகின்றன.

ஒரு சில குழந்தைகள் கையில் திண்பண்டங்களை வைத்துகொண்டு மரத்தை தொட்டு விளையாடும் போது, மரத்தில் நரிக்குறவர்கள் அணிலுக்காக தடவி வைத்துள்ள விஷத்தோடு சேர்த்து திண்பண்டங்களையும் சாப்பிடும் நிலை ஏற்படலாம். இதனால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

puducherry gypsies hunt squirrels in a dangerous way

எனவே அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்த கொடிய செயலில் ஈடுபடுபவர்களை தண்டித்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+