யார்னு பாருங்க.. இவர்தான் புதுச்சேரி ஹீரோ.. ஒரு பாட்டி தெருவில் வந்தாங்களாம்.. என்னாச்சு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: அந்த பாட்டி ரோட்டில் நடந்து வந்துட்டே இருந்தாங்களாம்.. அப்பதான் நம்ம போலீஸ்கார "ஹீரோ" என்ட்ரி தந்துள்ளார்.. ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களின் பாராட்டையும் பெற்று வருகிறார். யார் இவர்?

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது.. கடந்த மாதமே கண்ணை கட்டும் அளவுக்கு நாடு முழுவதும் வெயில் கொளுத்த துவங்கிவிட்டது.. காலையில் 7 மணிக்கெல்லாம் உஷ்ணம் அதிகரிக்க துவங்கிவிடுகிறது.. சாயங்காலம் 6 மணி ஆனாலும் அனல் அடங்குவதில்லை. இதனால் பகல் நேரத்திலேயே ரோட்டில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது.

Who is this Puducherry policeman and touching incident to bought an umbrella for the old lady due to Heavy Hot

வெயில்: இந்த வெயிலுக்கு பயந்துகொண்டே பொதுமக்களும் வீடுகளிலேயே முடங்கியிருக்கிறார்கள்.. அதிலும் வயதானவர்கள் நிறையவே அவதிப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் புதுச்சேரியிலும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், காரைக்காலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. நெடுங்காடு சந்திப்பு சாலையில் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் ஒரு போலீஸ்காரர்.. அவர் பெயர் முகமது ஹாஜா.

வயதானவர்கள்: நேற்றைய தினம், அந்த வழியே ஒரு பாட்டி வந்துள்ளார். ஆனால் அவர் காலில் செருப்பு அணியாமல் வந்திருக்கிறார்.. மதிய நேரத்தில், கடும் வெயிலில் நடந்து வந்தார்.. அவரால் நடக்கவே முடியவில்லை.. காலில் செருப்பில்லாமல் வருவதை பார்த்ததுமே போலீஸ்காரர் ஓடிச்சென்று, அந்த பாட்டியை தடுத்து நிறுத்தினார்.. பக்கத்திலிருந்து கடையில், செருப்பு மற்றும் குடையை வாங்கி பாட்டிக்கு கொடுத்தார்.

பாட்டி: பிறகு, அங்கிருந்து ஓடிச்சென்று, இளநீர் வாங்கி கொண்டுவந்து பாட்டிக்கு தந்தார்.. நெகிழ்ந்து போன பாட்டி, போலீஸ்காரருக்கு நன்றியை தெரிவித்துவிட்டு போனார்.. அதற்கு பிறகு, அந்த வழியாக சென்று கொண்டிருந்த வயதானவர்களுக்கும் போலீஸ்காரர் இளநீர் வாங்கி கொடுத்தார். இதையெல்லாம் கவனித்த பொதுமக்களே, வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளனர்.

Who is this Puducherry policeman and touching incident to bought an umbrella for the old lady due to Heavy Hot

இந்த வீடியோ இப்போது வைரலானதையடுத்து, போலீஸ்காரர் ஹாஜாவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இந்த போலீஸ்காரர், தன்னுடைய பல்வேறு அதிரடி சம்பவங்களால் ஏற்கனவே பேசப்பட்டவர்.. அதுமட்டுமல்ல, அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என்று தன்னுடைய ரேஷன்கார்டை, கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியவரும்கூட.

கவுரவ ரேஷன் கார்டு: அரசின் சலுகைகள் தனக்கு வேண்டாம் என்று கருதும், வசதியான குடும்பத்தினருக்கு, புதுச்சேரி அரசு கவுரவ ரேஷன் கார்டை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த கார்டை பெற்றதுடன், சாலையில் செல்லும் வயதானவர்களுக்கு ஓடி ஓடி உதவிக்கொண்டிருக்கிறாராம் காக்கி சட்டை "ஹீரோ" ஹாஜா.. சபாஷ்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+