Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது லிஸ்ட்லயே இல்லயே.. புதுச்சேரியில் புது பரபரப்பு.. ரங்கசாமி எடுக்கும் திடீர் முடிவு.. அதிரும் பாஜக

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: அகில இந்திய என்ஆர் காங்கிரசின் தலைவரும், முதல்வருமான ரெங்கசாமி, மாஸ்டர் பிளான்களை கையில் எடுத்துள்ளார்.. இதையடுத்து, காங்கிரஸ் மட்டுமல்லாமல், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் உற்றுநோக்க தொடங்கி உள்ளன.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பொறுத்தவரை எதையும் பக்காவாக பிளான் செய்து கொண்டுதான் களத்தில் குதிப்பார்.. இப்படித்தான் அன்று, மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, புதுச்சேரியில், அதிமுகவுடன் கூட்டணி என, அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் எகிறியவர்தான் ரங்கசாமி..

Puducherry Incident and Are these the strategies of Puducherry CM Rangasamy

ஜெயலலிதா: இதை அன்று ஜெயலலிதாவே பகிரங்கமாக விமர்சித்தார்.. ரங்கசாமி இப்படி செய்யலாமா? நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இவரது இவர் முதல்வரான பிறகு, புதுச்சேரிக்கு செய்த பணிகள் ஏராளம்..

அதனால்தான், இவரது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், இவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் உற்சாகமாகிவிடுவார்கள். விதவிதமான பேனர்கள், கட் அவுட்கள், போஸ்டர்கள் அடித்து ஒட்டி ரங்கசாமியின் பிறந்தநாளை கொண்டாடுவது இவர்களின் வழக்கம்.

பொன்னியின் செல்வன்: அப்படித்தான் கடந்த பிறந்தநாளின்போது, "விக்ரம்" படத்தில் கமலுக்கு பதிலாகவும் ரங்கசாமி முகம் காணப்பட்டது.. "பொன்னியின் செல்வன்" படத்தில் குதிரையேறி வரும் கார்த்திக்கு பதிலாக ரங்கசாமி அந்த குதிரையில் உட்கார்ந்திருந்தார்.. அந்த அளவுக்கு புதுச்சேரி மக்களின் பொன்னியின் செல்வனாக மாறி காட்சி தந்தார் ரங்கசாமி.

வரும் ஆகஸ்ட் 4ம் தேதி ரங்கசாமிக்கு ஹேப்பி பர்த்டே வரப்போகிறது. ஆனால், இந்த முறை பிறந்தநாளானது, ரங்கசாமிக்கு சற்று வித்தியாசமாக இருக்க போகிறதாம்..

காரணம், விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், தன்னுடைய அரசியல் வியூகத்தையும், இந்த பிறந்தநாளின்போதே இறக்க திட்டமிட்டுள்ளாராம் ரங்கசாமி. அந்த வியூகம் என்ன என்பதற்கு முன்பு, தற்சமயம் புதுச்சேரி நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை நாம் சுருக்கமாக பார்ப்போம்.

கூட்டணி: புதுச்சேரியில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிவலுவாக உள்ளதாக முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் அடிக்கடி தெரிவித்து வந்தாலும், சில மனவருத்தங்கள் கூட்டணியுடன் இருக்கத்தான் செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகிறார்கள்.

பாஜக கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருக்கும் ரங்கசாமி, ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே "மாநில அந்தஸ்து" இல்லாததால் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.. இதைத்தவிர, மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாகவும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறார்.

"இந்த முதல்வர் சீட்டில் ஏன் உட்கார்ந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.. அப்படியே எழுந்து பின்பக்கமாக வெளியே போய்டலாம் போல இருக்கிறது.. முன்னாடியெல்லாம் முதல்வர் சொன்னால் உடனே நடக்கும்.. ஆனால், இப்போது அப்படி கிடையாது.. அரசு விழாக்களுக்கு போனால், கல்வெட்டில் பெயர் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது" என ரங்கசாமி வேதனையை வெளிப்படுத்துவதாக செய்திகள் கசிகின்றன.

கோப்புகள்: சுருக்கமாக சொல்லப்போனால், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னரே, புதுவையின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், கோப்புகளிலும்கூட, அவரே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாகவும் தெரிகிறது.

சொந்த கூட்டணிக்குள்ளேயே இப்படி பொருமல்கள் அடிக்கடி கசிந்து வருவதால், "ஆள்வதற்கு தகுதியில்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு வெளியே போகட்டுமே" என்று சீறி வருகிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. ஆக, ஒருபக்கம் கூட்டணி, மறுபக்கம் எதிர்க்கட்சிகள் என இரண்டிற்கும் நடுவில் சிக்கி, ரங்கசாமி தடுமாறுவதாக கூறுகிறார்கள்.

ஆலோசனைகள்: இப்படிப்பட்ட சூழலில்தான், பக்கா மாஸ்டர் பிளானோடு காய்களை நகர்த்த துவங்கியிருக்கிறார் ரங்கசாமி. அந்தவகையில், ஆலோசனைகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். தமிழகத்திலும் கால் பதிக்கவே நிறைய ஆலோசனைகள் நடக்கிறதாம். பாஜக கூட்டணியில் இருந்து வரும் ரெங்கசாமி, அதிமுக-பாஜக கூட்டணியில் இணையலாமா ? அல்லது நடிகர் விஜய் அரசியல் கட்சித் துவக்கினால் அவருடன் கூட்டணி குறித்து விவாதிக்கலாமா ? என்றெல்லாம் ஆலோசிப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

இப்படியான பலத்த வியூகங்களுக்கு நடுவில்தான், நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 4ம் தேதி ரங்கசாமியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாளை கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடுவது என்று தீர்மாணிக்கப்பட்டுள்ளதாம். தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட ரெங்கசாமி அனுமதிக்கும் பட்சத்தில், சென்னையில் அவரது பிறந்தநாள் போஸ்டர் பரவலாக காட்சியளிக்கும் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.

கேம் ஸ்டார்ட்: கடந்த வருடம், விஜய்யை சந்தித்து பேசியபோது, புதுச்சேரியிலும், விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்ததாகவும் அப்போதே தகவல் வெளியாகியிருந்த நிலையில், இம்முறையும் விஜய் ஆதரவை ரங்கசாமி நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ரங்கசாமி கேம் ஸ்டார்ட்...!!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+