ஒரே ஆட்சியில் 2 முறை பதவியேற்பு.. சாதனை படைத்த ஜான் குமார்.. நாராயணசாமி ஹேப்பி
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜான்குமார் சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான்குமார் 7170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு விழா இன்று சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஜான்குமார் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட ஜான்குமாருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஒரே ஆட்சியில் இரண்டாவது முறை ஜான்குமார் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். ஏற்கனவே தனது நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அத்தொகுதியை முதலமைச்சர் நாராயணசாமிக்கு விட்டுகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications