கலகலப்பான லொள் லொள்.. விதம் விதமான பவ் பவ்.. புதுச்சேரியைக் கலக்கிய நாய்க் கண்காட்சி!
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள நாய்கள் கிளப் சார்பில் நடந்த கண்காட்சியில் விதம் விதமான வீட்டு நாய்கள் கலந்து கொண்டு கலக்கின.
புதுச்சேரி கெனான் கிளப் சார்பில் ஆண்டு தோறும் வீடு மற்றும் கிளப்களில் வளர்க்கப்படும் நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் 5 வது ஆண்டாக மாநில அளவில் நாய்களுக்கான போட்டி தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ஜூனியர், இண்டர் மீடியேட், பிரடின், ஓபன் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. டெல்லி, கேரளா, கர்நாடக, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்கள் பங்கேற்றன.

இந்த போட்டியில் ஜெர்மன் ஷெப்பர்ட், பாக்சர், டாபர்மென், ராட்வீலர், பொமரேனியன், பக், ராஜபாளையம் போன்ற பல்வேறு வகையை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்துகொண்டன.

உடல் கட்டமைப்பு, ஆரோக்கியம், கீழ்படிதல் போன்றவற்றில் அதிக மதிப்பெண் எடுத்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் நாய்களுக்கான பேக்ஷன் ஷோவும் நடைபெற்றது. இதில் நாய்களுக்கு வண்ண வண்ண ஆடைகளை உடைத்தி நாயின் உரிமையாளர்கள் அசத்தினர்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications