"ஸ்லிமா இருக்கணுமா.." பெண்களின் நிர்வாண படங்களை பெற்று மிரட்டிய இளைஞர்! புதுச்சேரியில் பகீர்
புதுச்சேரி: புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் பெண்களிடம் இருந்து நிர்வாணப் படங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களை பிளாக் மெயில் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சமீப காலங்களாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கணிசமாக அதிகரித்தே வருகிறது.
அப்படித்தான் இளைஞர் ஒருவர் மிகவும் கீழ்த்தரமான செயலை செய்து இப்போது போலீசாரிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் புதுச்சேரியில் தான் நடந்துள்ளது.

புதுச்சேரி: அங்கே 22 வயது இளைஞர் ஒருவர் பல இளம் பெண்களுக்கு மெசேஜ் செய்துள்ளார். தன்னை பெண் ஜிம் டிரைனர் போல காட்டிக் கொண்ட அவர், அவர்களின் நிர்வாணப் படங்களைக் கேட்டுள்ளார். அதற்குச் சிலர் தயங்கியதற்கு, "நானும் பெண் தானே.. தைரியமா அனுப்புங்கள்.. உங்கள் உடல் அமைப்பை மேம்படுத்த டிப்ஸ் கொடுக்கவே கேட்கிறேன்" என்று அவர்கள் நம்பும் வகையில் பேசியுள்ளார்.
இதே டைலாக்கை விட்டுப் பல இளம் பெண்களிடம் இருந்து நிர்வாண படங்களைப் பெற்ற அந்த இளைஞர் அவர்களை பிளாக் மெயில் செய்யவும் ஆரம்பித்துள்ளார். இது தொடர்பாகப் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த 22 வயது இளைஞரைப் புதுச்சேரி போலீஸார் கைது செய்துள்ளனர்.
நிர்வாண வீடியோ: கைது செய்யப்பட்டவர் திவாகர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அந்த நபர் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் வசித்து வருகிறார். அவரை கைது செய்த போலீசார், அவரது போனையும் ஆய்வு செய்தனர். அதில் 10க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து விரிவான ஆய்வுக்கு மொபைலை சோதனை கூடத்திற்கு அனுப்பியுள்ளனர். மற்ற பெண்கள் புகார் அளித்தால் அதன் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்யத் தயாராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார்: இது குறித்து போலீசார் கூறுகையில், "திவாகர் இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி டிப்ஸ்களை அளிக்க ஒரு பக்கத்தைத் தொடங்கியுள்ளார். முதலில் அவருக்கு இரு பெண்கள் மெசேஜ் அனுப்பியுள்ளனர். அந்த நபர் தன்னை ஒரு பெண் உடற்பயிற்சி டிரைனர் போல நடித்து, மற்ற பெண்களுக்கு டிப்ஸ் வழங்கியுள்ளார். தொடர்ந்து மேசேஜ் செய்பவர்களிடம் உடல் அமைப்பை மேம்படுத்த டிப்ஸ் வேண்டும் என்றார் அவர்களின் புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார்.
அப்போது தான் தன்னால் சிறந்த பரிந்துரைகளை வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரை பெண் டிரைனர் என்று நம்பிய அந்த பெண் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார். ஓரிரு நாட்களில், அந்த நபர், தனது மற்றொரு இன்ஸ்டா கணக்கு மூலம், அதே பெண்களுக்கு அவர்கள் அனுப்பிய அதே நிர்வாண படங்களை அனுப்பி மிரட்டியுள்ளார்.

தன்னுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேச வேண்டும் என்றும் இல்லையென்றால் போட்டோ மற்றும் வீடியோக்களை ஆன்லைனில் கசியவிடுவதாக மிரட்டியுள்ளார்" என்றனர்
ஷாக் சம்பவம்: இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் திவாகர் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாரென்றே தெரியாத நபர்களுடன் பெண்கள் தங்கள் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம் என புதுச்சேரி போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications