"நான்தான்டா வெட்கப்படணும்".. சிறுவர்களுடன் ஜாலி ரைடு.. யாருன்னு பார்த்தா அமைச்சர்! க்யூட் வீடியோ
புதுச்சேரி: பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து புதுச்சேரி பெண் அமைச்சர் அடித்த க்யூட்டான லூட்டிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குழந்தைகள் தினத்தன்று பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைச்சர் செய்த இந்த செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
ஒரு அமைச்சரே தங்களுடன் சேர்ந்து ஜாலியாக அரட்டை அடித்தது பள்ளி மாணவர்களையும் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காலம் மாறிப்போச்சு..
இந்தியாவை பொாறுத்தவரை, ஒருகாலத்தில் அரசியல்வாதிகள் என்றாலே மக்கள் ஒதுங்கிப் போகும் சூழல் இருந்தது. அதுவும் அமைச்சர் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு பகுதிக்கு அமைச்சர் வருகிறார் என்றால் மக்கள் எட்ட இருந்து வேடிக்கை பார்ப்பதும், அவரை பார்த்து கையசைப்பதுமாகதான் அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் இடையேயான உறவு இருந்தது. ஆனால், காலம் மாற மாற, காட்சிகளும் மாறத் தொடங்கியது. எந்த அமைச்சராக இருந்தாலும், ஏன் முதலமைச்சராகவே இருந்தாலும் மக்கள் அவரிடம் நேருக்கு நேராக கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். அதனால் தற்போது அரசியல்வாதிகளுடன் மக்களுடன் மக்களாகவே பழக தொடங்கிவிட்டனர். அந்த வகையில், புதுச்சேரியில் ஒரு பெண் அமைச்சர் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்த ஜாலியாக அரட்டை அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

காரில் ஏற்றிய அமைச்சர்..
புதுச்சேரியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. இவர் காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சில பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்த அவர், அவர்களை தனது காரில் ஏற்றிக் கொண்டார். அமைச்சரின் காரில் ஏறிய சிறுவர்கள், சிறிது நேரம் அமைதியாக ஒருவரையொருவர் பார்த்தப்படி இருந்தனர்.

ஜாலி அரட்டை..
மாணவர்கள் ஒருவித அச்சம் கலந்த மனநிலையில் இருப்பதை அறிந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா அவர்களிடம் ஜாலியாக பேச்சுக் கொடுத்தார். "என்னடா.. படிப்புலாம் எப்படி போகுது.. படி படின்னு ரொம்ப டார்ச்சர் பண்றாங்களா.." என கிண்டலாக அமைச்சர் கேட்டார். அமைச்சர் இப்படி கேட்டதுதான் தாமதம். மாணவர்கள் தங்கள் வால்தனத்தை காட்டத் தொடங்கினர். ஒருவரையொருவர் வழக்கமாக கலாய்த்து பேசிய மாணவர்கள், ஒருகட்டத்தில் அமைச்சரையும் கலாய்க்க தொடங்கினர்.

"நான்தான் டா வெட்கப்படனும்.."
ஆனால், அதை மிக ஜாலியாக எடுத்துக்கொண்ட அமைச்சர், "டேய்.. என்கிட்டியே உங்க சேட்டையை காட்ட ஆரம்பிச்சிட்டீங்களா டா.." எனக் கூறினார். பின்னர் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், தனது செல்போனில் செல்ஃபி வீடியோவை அமைச்சர் எடுத்தார். அப்போது மாணவர்கள் வெட்கப்பட, "டேய் நான்தான் டா வெட்கப்படனும் நீங்க என்னடா பன்றீங்க.." என குழந்தை மொழியில் பேசினார் அமைச்சர். பின்னர் அவர்களை பள்ளியில் இறக்கிவிட்ட அமைச்சர் சந்திர பிரியங்கா, அவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த வீடியோவை அமைச்சர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதை பார்த்த பொதுமக்கள், அமைச்சர் என்ற ஸ்டேட்டஸை எல்லாம் பார்க்காமல் குழந்தைகளுடன் குழந்தையாக மாறிய சந்திர பிரியங்காவை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications