புதுச்சேரியில் "கணக்கு தீர்ப்பேன்".. ரங்கசாமி தூக்கிய கார்டால் அதிரும் பாஜக.. முறிகிறதா கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் எப்போதுமே பரபரப்புகள் காணப்படும்.. எப்போது தேர்தல்கள் முடிந்தாலும் இந்த பரபரப்புகள் மட்டும் ஓய்வதில்லை.. அதிலும் இந்த முறை ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் நடந்து வருகிறது. காரணம், ஆட்சி அமைந்து இரண்டரை மாதங்களை அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை.. என்ன காரணம்? முதலமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்த லிஸ்ட்டை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டதா? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் போட்டியிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி மெஜாரிட்டி இடங்களை பெற்று, ஆட்சியையும் பிடித்தது. என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தனர்.

Puducherry NDA Alliance

புதுச்சேரி ரங்கசாமி

இதில் ஆர். காங்கிரஸுக்கு 3 அமைச்சர் பதவிகளுக்கும், பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவிகளுடன் சபாநாயகர் பதவியும் வழங்குவது என்று தேர்தலுக்கு முன்பாகவே 2 கட்சிகளுக்கும் ஒரு சீக்ரெட் ஒப்பந்தம் நடந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றதுமே, அதிகாரப் போட்டி உருவெடுக்க ஆரம்பித்து விட்டது.. முக்கிய இலாக்காக்களை யாருக்கு ஒதுக்குவது என்பதில் பாஜகவுக்கும் என்.ஆர். காங்கிரஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.. இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த இழுபறிக்கு நடுவே, கடந்த 20ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்களுக்கான இலாக்கா ஒதுக்கீடு லிஸ்ட்டை தயார் செய்து, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து வழங்கினார்.. ஆனால், லிஸ்ட் கைமாறி 9 நாட்கள் ஆகியும், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமே ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியாகவில்லையாம்.

அமைச்சரவை லிஸ்ட்

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே ஆளுநர் மாளிகை இந்த அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது... முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக எம்எல்ஏக்களுக்கு ஒதுக்கிய இலாக்காக்கள் , அந்த கட்சியின் தலைமைக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், அதனாலேயே டெல்லி மேலிடம் இந்தப் லிஸ்ட்டுக்கு பச்சைக்கொடி காட்ட மறுத்துவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

அமைச்சரவை இலாக்கா ஒதுக்கீடு குறித்து ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு ரங்கசாமி, "எந்த நேரத்தில் கணக்கு தீர்க்க வேண்டுமோ, அந்த நேரத்தில் கணக்கு தீர்ப்பேன்" என்று மட்டும் புன்னகைத்தபடியே சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.. ரங்கசாமி இப்படி யாரை சொல்கிறார் என்று தெரியவில்லை.. ஒருவேளை பாஜக தலைமைக்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கையா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

பாஜக முடிவு என்ன

முக்கியமான இலாக்காக்களை விட்டுத்தர பாஜக பிடிவாதம் காட்டும் நிலையில், முதலமைச்சரின் இந்த அதிரடி பதிலடியானது, கூட்டணிக்குள் நிலவி கொண்டிருக்கும் விரிசலை இன்னும் அதிகமாக்கி விட்டுள்ளதாகவே தெரிகிறது.

இந்த விரிசல் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.. ஆனால், வெறும் இலாக்கா சண்டையோடு நின்றுவிடப் போவதில்லை என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கிறார்கள்.. தேர்தல் முடிந்து இரண்டரை மாதங்களாகியும் ஒரு அமைச்சரவையை முழுமையாக செயல்பட வைக்க முடியாத சூழல் நிலவுவது, என்.ஆர். காங்கிரஸ்-பாஜக உறவில் பெருமளவு முறிவை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த நிராகரிப்பும், ரங்கசாமியின் எச்சரிக்கை போக்கும் புதுச்சேரி என்.டி.ஏ கூட்டணியை உடைக்கும் நிலைக்குத் தள்ளியிருப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.. அடுத்தகட்டமாக ரங்கசாமி என்ன முடிவெடுக்க போகிறார்? ரங்கசாமி தந்த லிஸ்ட்டை பாஜக ஓகே செய்யுமா? இந்த ஆட்சி தேர் தடம் புரளுமா? பாஜக வளைந்து கொடுக்குமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+