வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்.. பெண் உட்பட 2 வாலிபர்களை சுற்றிவளைத்த போலீஸ்!
புதுச்சேரி: புதுச்சேரியில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சார தொழில் செய்துவந்த, பெண் உட்பட மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடைபெற்று வருகிறது. 1000 ரூபாய் தொடங்கி 25 ஆயிரம் வரை பேக்கேஜ்கள் உள்ளன. விபச்சாரத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வந்தாலும், விபச்சாரம் தங்கு தடையின்றி நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.


இந்நிலையில் புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆண்கள் அதிகளவில் வந்து செல்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இன்று அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரம் நடந்து கொண்டிருந்தது.

இதனையடுத்து வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்துவந்தது காக்கையன்தோப்பை சேர்ந்த மஞ்சுளா, மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த வாலிபர்கள் வினோத்குமார் மற்றும் ஜெகன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வாலிபர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு இளம்பெண்ணை மீட்ட போலீசார், அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் போலீசாரிடம் பிடிபட்ட மஞ்சுளா மற்றும் இரண்டு வாலிபர்கள் மீது விபச்சார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல்துறை தலைமையகத்துக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து மசாஜ் சென்டர்களிலும் சோதனையில் ஈடுபடுமாறு அந்தந்த காவல்நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மசாஜ் சென்டர் என்ற போர்வையில் விபச்சாரம் நடத்தி வருபவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications