"எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்"னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்
புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு யாராவது போன் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தமிழகத்தை போல் புதுவையிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த எஸ்ஐஆர் படிவங்களை பிஎல்ஓ அதிகாரிகள் வீடு வீடாக கொடுத்து வருகிறார்கள். அதில் யாருக்காவது பூர்த்தி செய்ய தெரியாவிட்டால் அதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று பூர்த்தி செய்து கொடுத்து விடலாம்.
இந்த படிவத்தில் பூர்த்தி செய்து அதிகாரிகள் சரிபார்த்தபிறகுதான் ஒவ்வொருவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த நிலையில் சிலருக்கு எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக பேசுவதாக கூறி ஓடிபி எண்களை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு யார் ஓடிபி கேட்டாலும் கொடுக்க வேண்டாம். "எங்களுடைய வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ) சென்று பூர்த்திச் செய்து கொள்கிறோம்" என கூறி இணைப்பை துண்டித்துவிடுங்கள்.
உங்களை கட்டாயப்படுத்தி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அழைப்பு வந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது 1930 மூலமாகவோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எனவே உங்கள் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர், அவரின் தொலைப் பேசி எண் ஆகியவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இது போல் யாராவது போன் செய்தால் பிஎல்ஓ அதிகாரிகளை தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
0413 - 2276144, 94892 05246 மற்றும் ஆகிய இலவச எண்களிலும், '[email protected]' மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க 'www.cybercrime.gov.in' ஐ பயன்படுத்தவும் என தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications