"ராகு கேது பெயர்ச்சி பலன் அளிக்க வாழ்த்துகள்".. திமுக போட்ட அதிரடி விளம்பரம்.. புதுச்சேரியில் அடடே!
ராகு - கேது பெயர்ச்சி பலன் அளிக்க திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
புதுச்சேரி: "ராகு - கேது பெயர்ச்சி பலன் அளிக்க வாழ்த்துக்கள்" என்று திமுக தரப்பில் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.. முக ஸ்டாலின், உதயநிதி, கருணாநிதி என 3 பேரின் போட்டோக்களுடன் அந்த போஸ்டர் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.
அரசியல் மாற்றத்திற்கு எப்போதுமே முக்கிய காரணம் கிரகங்களின் ராகு-கேது என்று பொதுவாக நம்பப்படுவது ஆகும்.. ஓவர் நைட்டில் எதுவானாலும் நடக்கலாம் என்றும், ஆண்டியும் அரசன் ஆவான், அரசனும் ஆண்டி ஆவான் என்பதற்கு காரணமே சர்ப்ப கிரகங்கள் என்றும் சொல்லப்படும்.

தற்போதும் ராகு-கேது பெயர்ச்சி நடந்துள்ளது.. இதுவரை அரசியலில் எதிர்பார்க்காத புதிய சாதனைகள் நடக்கும் என்றும், உலகளவில் இந்தியாவும் பேசப்படும் என்றும் ஆரூடம் சொல்லப்பட்டுள்ளது. அதனால், நம்பிக்கை உள்ள பலரும், தங்களது அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர்.
அதில் முக்கியமானது திமுக - அதிமுகவாகும்.. அதிமுகதான் அரியணை ஏறும், அதிலும் எடப்பாடியே அடுத்த முதல்வர் என்று ஒரு தரப்பு சொல்கிறது.. 10 வருஷமாக ஆட்சியில் இல்லாத நிலையில், இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று திமுக தரப்பு முயன்று வருகிறது.
இந்த சமயத்தில், புதுச்சேரி திமுக சார்பில் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.. அந்த போஸ்டரை பிரபலமான பத்திரிகை ஒன்றில் விளம்பரமாகவும் தந்துள்ளனர்.. அந்த போஸ்டரில் "ராகு - கேது பெயர்ச்சி பலன் அளிக்க வாழ்த்துக்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
"தளபதியாரின் ஆலோசனையின் பேரில்.. உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, புதுச்சேரி மாநிலத்தில் திமுக வலுப்பெற இளைஞர் ஒன்றுதிரண்ட இளைஞர் அணியாக.." பகுத்தறிவு பேசும் திமுக சார்பில் இப்படி ஒரு போஸ்டரா என்று பல தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதில் ஸ்டாலின், உதயநிதி போட்டோவுடன், கருணாநிதியின் போட்டோவும் உள்ளது.
இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. நடுராத்திரி உதயநிதி ஸ்டாலின் விநாயகர் சிலையுடன் ட்வீட் போட்டதற்கு ஏற்கனவே விடை தெரியவில்லை.. இப்போது இந்த போஸ்டரில் ராகு-கேது பெயர்ச்சி பலன் அளிக்க வாழ்த்துக்கள் என்று பகிரங்கமாகவே சொல்லப்பட்டுள்ளது.. இதை திமுக தலைமை பார்த்ததா? பார்க்கவில்லையா? அல்லது கண்டும் காணவில்லையா? எதுவுமே புரியவில்லை.












Click it and Unblock the Notifications