புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை!
புதுவை: புதுவை சட்டசபை தேர்தலையொட்டி வரும் ஏப்ரல் 6ஆம் தேதி புதுவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கிறார். அன்றைய தினம் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலினும் பிரச்சாரம் செய்கிறார். இருவரும் ஒரே நாளில் பிரச்சாரம் செய்யும் போதிலும் இருவரும் தனித்தனியே பிரச்சாரம் செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் முடிவடைந்துவிட்டது. கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் திமுக 14 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ள போதிலும் 5 தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன. திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் பிரமுகர்கள் வாபஸ் பெற மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இதனால் திமுக காங்கிரஸ் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அது போல் விசிக போட்டியிடும் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் வரும் 6ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அன்றைய தினம் ஸ்டாலினும் புதுவையில் பிரச்சாரம் செய்கிறார்.
ராகுல் காலையிலும் ஸ்டாலின் மாலையிலும் பிரச்சாரம் செய்கிறார்கள். இருவரும் ஒரே நாளில் பிரச்சாரம் செய்தாலும் தனித்தனியே செய்கிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீட்டின் போதிலிருந்தே திமுக- காங்கிரஸ் இடையே பிரச்சினை எழுந்தது.
41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட காங்கிரஸின் கோரிக்கைகளை ஏற்க திமுக மறுத்துவிட்டது. மேலும் காங்கிரஸ் நிர்வாகிகளான மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரை கட்சி தலைமை கண்டிக்கவில்லை என்று திமுகவுக்கும் கோபம் இருந்தது.
இந்த நிலையில் ஸ்டாலின் பிறந்தநாளில் கூட கடந்த முறை சகோதரர் என குறிப்பிட்டிருந்த ராகுல் காந்தி, இந்த முறை ஸ்டாலின் சார் என குறிப்பிட்டிருந்தது அவருக்கு திமுக மீதான கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications