புதுவை முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம்... மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமனின் உடல் 21குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி சடங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் உடல்நிலை குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 78. இதையடுத்து நேற்று காலை முதல் புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள், திமுக கூட்டணியினர் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தஅவரது உடல் இன்று காலை புதுச்சேரியில் இருந்து அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு புதுச்சேரி போலீசார் அணிவகுப்புடன் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜானகிராமனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.













Click it and Unblock the Notifications