புதுவையிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்திற்கென தனி கல்வி வாரியம் கிடையாது. புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடதிட்டங்களும், மாகி பிராந்தியத்தில் கேரளா பாடத்திட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

SSLC Public exam cancelled in puducherry state

இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் 10 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி எனவும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.

SSLC Public exam cancelled in puducherry state

இதனிடையே தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருவதால், புதுச்சேரி மாநிலத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதனால் மாணவர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+