"ஈரக்குலையே" நடுங்கி போச்சு.. இதயத்தை நொறுக்கிய "ம்மா, ம்மா" சத்தம்.. யார் அது? புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரியில் கன்றுக்குட்டியின் வீடியோ இதயத்தை கலங்கடித்து வருகிறது
புதுச்சேரி: ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.. அந்த வீடியோவை பார்ப்பவர்கள் பலரும் இதயமே வெடித்து கலங்குகிறார்கள்.
சமீபத்தில், வடமாநிலம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்தது.. குர்பானி தருவதற்காக ஒருவர், தான் வளர்த்த ஆட்டை சந்தையில் விற்க போனார்.. ஒருநபர் அந்த ஆட்டை விலை பேசினார்.. பிறகு ஓனரிடம் பணத்தை தந்துவிட்டு, ஆட்டை கிளப்பி கொண்டு போக முயன்றார்..
அப்போது திடீரென அந்த ஆடு, ஓனரை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டது.. அந்த ஆட்டை சமாதானப்படுத்த முயன்றும் ஓனரால் முடியவில்லை..

விக்கி அழுத ஆடு
அழுகையை அந்த ஆடு நிறுத்தவே இல்லை.. விக்கி விக்கி அழுததை பார்த்து, சந்தைக்கு வந்தவர்கள் கண்கலங்கி நின்றனர்.. ஓனரும் கண் கலங்கினார்... இதனை பார்த்ததும் அந்த ஆட்டினை வாங்கிய நபர், பணத்தை பெற்றுக்கொண்டு, அந்த ஆட்டை ஓனரிடமே கொடுத்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.. அதற்கு பிறகு ஆடு அழவில்லை.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் ஆடியோ கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் வைரலானது... சில சமயம் மனிதர்களைவிடவும், விலங்குகளின் உணர்வுகள் மென்மையாகி விடுகிறது.

வெட்டுக்களம்
இதோ புதுச்சேரியில் நடந்த சம்பவம் வீடியோவாக தற்போது சுற்றிக் கொண்டிருக்கிறது.. புதுச்சேரி வினோபா நகரின் எல்லைப் பகுதியில் மாடுகள் வெட்டும் களம் ஒன்று உள்ளது... ஆனால், இந்த இடத்துக்கு அரசின் அனுமதி பெறவில்லை.. இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இடத்தில் மாடுகள் வெட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.. அந்தவகையில், இந்த பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு, கன்றுக்குட்டி ஒன்று சுற்றி சுற்றி வந்தது.. அழுதுகொண்டே இருந்தது..

"மா...மா"
"மா...மா" என்று ஒரே இடத்தில் அழுதபடியே வட்டமடித்தது.. அந்த வழியாக வந்தவர்கள், கன்றுக்குட்டி அழுவதை பார்த்து, "வாயில்லா ஜீவன்களுக்கான அமைப்பு"க்கு தகவல் தந்துள்ளனர்.. அவர்கள் வந்து விசாரிக்கும்போது விஷயம் வெளிவந்தது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த இடத்தில் பசு ஒன்று கறிக்காக வெட்டப்பட்டுள்ளது.. இதை அந்த கன்றுக்குட்டி பார்த்துவிட்டதாம்.. அதனால், தன் அம்மாவை தேடி, அது வெட்டப்பட்ட இடத்துக்கே வந்து அழுது கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

வாயில்லா ஜீவன்
வாயில்லா ஜீவன்களுக்கான அமைப்பு தலைவர் அசோக் ராஜ், இந்த வீடியோவை எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.. புதுச்சேரியில் அனுமதிக்கப்படாத பல இடங்களில் ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன... மறைமுகமான இடத்தில் மட்டுமே இவைகளை வைத்து வெட்ட வேண்டும் என்று விதி இருக்கிறது.. ஆனால் அதனையும் மீறி புதுச்சேரியில் பொது இடங்களில் வெட்டப்படுகின்றன.. இவற்றை தடுக்க வேண்டும் என்றும், நோய்வாய்ப்பட்ட ஆடு- மாடுகளை வெட்டக்கூடாது, அதிலும் கன்றுகளை வெட்டவே கூடாது என்றெல்லாம் விதிகள் உள்ளன.. இதில் எந்த விதியும் அங்கு பின்பற்றப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்..

கன்றுக்குட்டி
இது தொடர்பாக அரசுக்கு ஆதாரங்களுடன் புகார் சொல்லியும்கூட, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று நொந்து கொள்கிறார்கள். இதனிடையே, அந்த கன்றுக்குட்டியின் வீடியோ இணையத்தில் வெளியாகி கலங்கடித்து கொண்டிருக்கிறது.. தன் அம்மா வெட்டப்பட்ட இடத்துக்கே வந்து அழுது கொண்டிருக்கிறது.. இப்படித்தான் 2 வருடங்களுக்கு முன்பு உபியில் ஒரு சம்பவம் நடந்தது.. கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். இவர் 12 வருடங்களுக்கு முன்பு, தெருவோரத்தில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த நாய்க்குட்டி ஒன்றை எடுத்து வந்து சிகிச்சையளித்து பாசமாக வளர்த்து வந்துள்ளார்.

ஜெயா ஜெயா
அந்த நாய்க்கு ஜெயா என்று பெயர் வைத்தார்.. ஒருநாள் அனிதா ராஜ் சிங், சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, அனிதா ராஜ் சிங்கின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது... அனிதாவின் மரணம் அவரது குடும்பத்தை துக்கத்தில் ஆழ்த்திய நிலையில், அவர் ஆசையாக வளர்த்து வந்த ஜெயா குரைத்துக்கொண்டே அழ ஆரம்பித்தது.. நேரம் ஆக ஆக ஜெயாவின் அழுகை அதிகமாகி கொண்டே போனது.. இதனால், துக்க வீட்டில் இருந்தவர்கள், ஜெயாவை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தவித்தனர்..

தலைமாட்டில்
ஓனர் தலைமாட்டிலேயே அழுது கொண்டிருந்த ஜெயாவை, அங்கிருந்து நகர்த்தவும் முடியவில்லை.. அழுகையையும் நிறுத்த முடியவில்லை.. அழுது கொண்டே இருந்த ஜெயா, பிறகு திடீரென அந்த அப்பார்ட்மென்ட்டின் குடியிருப்பின் 4வது மாடிக்கு ஓடியது.. அங்கிருந்து சத்தமாக அழுதுகொண்டே கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது.. இதை பார்த்து பதறிப்போன குடும்ப உறவினர்கள் படுகாயமடைந்த ஜெயாவை, அருகிலிருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..

அடைக்குந்தாழ்
ஆனால், ஜெயா ஏற்கெனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.. இந்த சம்பவம் அப்போது பொதுமக்களை அதிர வைத்தது.. அந்தவகையில், இப்போது இந்த சம்பவமும் நடந்துள்ளது.. சில சமயங்களில், மனிதர்களைவிட சில மிருகங்களே பாசத்தில் மிஞ்சிவிடுகின்றன.. மிருகங்களிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்வது நிறையவே இருக்கிறது.. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!












Click it and Unblock the Notifications