கைதான கோவை இளைஞர்கள்.. பணம் வாங்கி வாங்கியதாக பரவும் தகவல்.. நடிகை தமன்னா ஆவேசம்
புதுச்சேரி: கோவையில் பல கோடி மேசாடி செய்ததாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஹாஸ்பே நிறுவனத்தில் திறப்பு விழா மற்றும் விளம்பர விழாவில் பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் வரவழைக்கப்பட்டதாகவும். இதில் நடிகை தமன்னாவுக்கு ரூ.25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு ரூ.18 லட்சம் என மொத்தம் 43 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவின.இதனிடையே தன்னை பற்றி பரவியது வதந்தி என்றும், இப்படி பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த ஹாஸ்பே நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என வாக்குறுதி அளித்துள்ளது. வாடிக்கையாளர்களை கவர கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளத. முதலீட்டாளர்களை நம்ப வைக்க விளம்பரங்களில் பிரபல நடிகைகளை களம் இறக்கியுள்ளது. முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு கோவையில் ஹாஸ்பே நிறுவனத்தின் தொடக்க விழாவில் நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்களை அந்த நிறுவனத்தினர் பங்கேற்க வைத்ததாக தகவல்கள் வெளியாகியது.

அதன்பின்னர் 3 மாதங்களுக்கு பிறகு மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் விழா நடத்தியதுடன், பிரபல நடிகையான காஜல் அகர்வால் மூலம் தங்களிடம் முதலீடு செய்த ஏராளமனோருக்கு சொகு கார்களை பரிசாக வழங்க வைத்தாககவும்செய்திகள் பரவின. கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், பிரபலங்களை வைத்து விழா என அதிக முதலீட்டாளர்களை கவர்ந்த நிலையில், உண்மை என்று நம்பி பலர் பணம் செலுத்தினார்களாம்
இப்படி டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் ரூ.50 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு 'ஹாஷ்பே' நிறுவனத்தால் பணத்தை கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.. நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்தபடி பணத்தை கொடுக்க முடியாமல், அவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டனர்.
எனினும் ஹாஷ்பே நிறுவன வங்கி கணக்கில் உள்ள பணத்தை வைத்துக்கொண்டு மோசடி கும்பல் ஜாலியாக இருந்துள்ளது. இந்த நிலையில் தான் புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் அசோகன் 98 லட்சம் ஏமாந்ததாக அளித்த புகாரின் பேரில் புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை தேடி வந்த போலீசார், கோவையில் நட்சத்திர ஓட்டலில் மோசடியில் தொடர்புடைய 36 வயதாகும் நித்தீஷ் ஜெயின் , 40 வயதாகும் அரவிந்த்குமார் இருப்பது தெரியவந்தது. அங்கு அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திறப்பு விழாவில் பங்கேற்க நடிகை தமன்னாவுக்கு ரூ.25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு ரூ.18 லட்சம் என மொத்தம் 43 லட்சம் வழங்கப்பட்டுள்ள திடீரென தகவல்கள் பரவின. இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி. நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு புதுச்சேரி போலீசார் சம்மன் அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இது உண்மையா, இல்லையா என்பது போலீசார் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் செய்திகள் வேகமாக பரவின.
எனவே இதுபற்றி பிரபல ஆங்கில ஊடகம் நடிகை தமன்னாவிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு விளக்கம் அளித்த நடிகை தமன்னா, கிரிப்டோகரன்சி மோசடி குறித்து என்னை பற்றி பல்வேறு வகையான வதந்திகள் பரப்பப்படுவதாக எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது போன்ற போலி, தவறாக வழிநடத்தும் மற்றும் தவறான அறிக்கைகள் மற்றும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஊடகங்களில் உள்ள எனது நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். வதந்திகள் மற்றும் அறிக்கைகளுக்கு பதில் அளிக்கப்படும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமன்னா பதில் அளித்துள்ளார்.
-
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications