Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நாங்க ஒண்ணும் சளைச்சவங்க இல்ல.. இதெல்லாம் இப்பதான்.. நானே மொதல்ல..”- தமிழிசை கடும் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: மற்றவர்களுக்கு இருக்கும் தமிழ்ப்பற்றை விட எங்களது பற்று எந்த வகையிலும் குறைந்தது கிடையாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் அதன் இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து ஜிப்மரில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது தவறு என தமிழிசை தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜிப்மர் சர்ச்சை

ஜிப்மர் சர்ச்சை

புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவமனை, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் ஜிப்மர் இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார்.

ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இவை அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவு கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. மோடி அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையின் ஒருபகுதி தான் இது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நேற்று புதுச்சேரி ஜிப்மர் முன்பு தி.மு.க சார்பில் இந்தி திணிப்பு முயற்சியைக் கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தமிழ் பற்றில் குறைந்தவர்கள் அல்ல

தமிழ் பற்றில் குறைந்தவர்கள் அல்ல

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கண்டனம் குறித்துப் பேசியுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "மற்றவர்களுக்கு இருக்கும் தமிழ்ப்பற்றை விட எங்களுடைய பற்று எந்த வகையிலும் குறைந்தது கிடையாது. தமிழ்ப்பற்றில் எந்த வகையிலும் நாங்கள் குறைந்தவர்கள் அல்ல. ஜிப்மர் முன்பு போராட்டம் நடத்துவது தவறு" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு இல்லை

இந்தி திணிப்பு இல்லை

செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை, "ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு நடைபெறவில்லை. பொதுமக்களுக்குத் தரப்படும் அத்தனை அறிக்கைகளும் தகவல்களும் தமிழில்தான் இருக்கின்றன. தமிழ் முதலிலும், ஆங்கிலம், இந்தி என்ற முறையில் இருக்கிறது. ஆனால், மறுபடியும் மறுபடியும் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறான அணுகுமுறை.

எந்த வகையிலும் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்ற உறுதியாகச் சொன்ன பிறகும் இந்தி மொழி அறிந்தவர்களுக்காக மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு சுற்றறிக்கையை வைத்துக்கொண்டு இந்தி திணிக்கப்படுகிறது என்ற ஒரு செய்தி பரப்பப்படுகிறது.

நானே தமிழில்தான் பதவியேற்றேன்

நானே தமிழில்தான் பதவியேற்றேன்

மற்றவர்களுக்கு இருக்கும் தமிழ்ப்பற்றை விட எங்களுடைய பற்று எந்த வகையிலும் குறைந்தது அல்ல. நானே தமிழில்தான் பதவி ஏற்றேன். புதுச்சேரி சரித்திரத்தில் முதல் முறையாக ஆளுநர் உரை தமிழில் வாசிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு முன்பாக போராட்டம் நடத்துபவர்கள் அங்கிருக்கும் நோயாளிகளுக்கு எதிராக நோயாளிகளின் நலனுக்கு எதிராக நடந்து கொள்பவர்கள். மருத்துவமனையில் கலவரம் செய்யக்கூடாது. ஜிப்மர் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்துவது தவறு" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+