இந்தியாவின் எல்லா காலேஜ் ஹாஸ்டலிலும் திருவாரூர் தமிழ்செல்வன் பேமஸ்.. புதுச்சேரியில் தரமான சம்பவம்
புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழக வால்மீகி மாணவர் விடுதியில் மதிய உணவு இடைவேளையின் போது அடிக்கடி லேப்டாப்கள் மாயமாகி வந்தது. இதை யார் திருடினார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனிடையே சிசிடிவி காட்சியில் பார்த்த போது ஒரு டிப்டாப் ஆசாமி திருடியது தெரியவந்தது. அவர் ஐந்து மாநிலங்களில் 500 லேப்டாப்கள் வரை திருடியதை கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்.
புதுவை காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் வால்மீகி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 10 நாட்களுக்கு முன் மதிய உணவு இடைவெளியின்போது ஒரே அறையில் 3 மாணவர்களின் 4 லேப்டாப்கள் திருட்டு போயிருந்தது. இது குறித்து பல்கலைக்கழக காவலாளி மகேஸ்வரன் புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் மாணவர் விடுதி வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்தனர்.

அப்போது முகத்தில் 'கர்சிப்' கட்டிக்கொண்டு விடுதி அறைக்குள் வந்த ஒரு நபர், மாணவர்களின் லேப்டாப்களை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக போலீசாரின் உதவியை நாடிய காலாப்பட்டு போலீசார், மாணவர் விடுதியில் பதிவான திருட்டு ஆசாமியின் வீடியோ காட்சி பதிவுகளை அனுப்பி விசாரித்தனர். அடுத்த நாளே காலாப்பட்டு போலீசாருக்கு லேப்டாப் திருடன் குறித்த விவரம் அளிக்கப்பட்டது.

லேப்டாப்பை திருடியவர் திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 28) என்பதும், கடந்த ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மாணவிகள் விடுதியில் புகுந்து 10-க்கும் மேற்பட்ட லேப்டாப்களை திருடி சென்றவர் என்பதும் தெரியவந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதார சட்டப்படிப்பு படித்த தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் மருத்துவ மாணவர்களின் விடுதிகளுக்குள் புகுந்து லேப்டாப் திருடுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

திருவாரூர் தமிழ்ச்செல்வன் மீது 30-க்கும் மேற்பட்ட லேப்டாப் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட லேப்டாப்களை திருடி ஆன்லைன் மூலம் குறைந்த விலைக்கு விற்று அதில் கிடைத்த பணத்தில் ஊர் சுற்றி ஜாலியாக இருந்து வந்தது தெரியவந்தது.
தாம்பரம் பகுதியில் அறை எடுத்து தங்கி கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் தமிழ்செல்வன் தினமும் கையெழுத்து போட்டு வந்துள்ளார். கடந்த 24ம் தேதி கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த அவரை காலாப்பட்டு போலீசார் கைது செய்தார்கள். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள பரியரம் அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவிகள் விடுதியில் புகுந்தும் லேப்டாப் திருடிதற்காக தமிழ்செல்வன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்செல்வனிடம் இருந்து 4 லேப்டாப்களை பறிமுதல் செய்த போலீசார் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications