புதுச்சேரியில் பரபரப்பு.. வெங்காயம் திருடிய கூலித் தொழிலாளி.. கட்டி வைத்து உதைத்த வியாபாரிகள்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்கெட்டில் வெங்காய மூட்டையை திருடிய சுமை தூக்கும் தொழிலாளியை வியாபாரிகள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் பெய்த கன மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதியாக குறைந்துவிட்டது. இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

இதனால் இல்லத்தரசிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 60 ரூபாயிலிருந்து தற்போது 150 ரூபாயை தாண்டி வெங்காயத்தின் விலை நாள்தோறும் ஏறிகொண்டே போகிறது.
விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும் வெங்காய தட்டுப்பாடும் மக்களை வாட்டிவதைத்து வருகிறது. இதனிடையே வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மத்திய அரசு எச்சரித்துள்ளது. வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நிலைமை இப்படியிருக்க, புதுச்சேரியில் வெங்காய மூட்டையை சுமைதூக்கும் தொழிலாளி ஒருவர் திருடி சரமாரியாக அடி உதை வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பெரிய மார்க்கெட். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து காய்கறிகள் மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு, சில்லரை வியாபாரிகளுக்கு இங்கிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் பெரிய மார்க்கெட் இன்று அதிகாலை பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தபோது, அந்த வாலிபர் மார்க்கெட்டில் அடுக்கி வைத்திருந்த வெங்காய மூட்டைகளில் ஒரு மூட்டையை கடத்தினார்.

இதை கண்ட அந்த கடையின் உரிமையாளர் மற்றும் வியாபாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் மூட்டையை மீட்டு, அவரை சரமாரியாக தாக்கி கட்டி வைத்தனர். மேலும் இதுகுறித்து பெரியகடை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை போலீசார், வியாபாரிகளிடமிருந்து வாலிபரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பெரிய மார்க்கெட்டில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications