புதுவை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்குகள், பச்சை கிளிகள் மீட்பு.. வனத்துறை நடவடிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் உயிருடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கொக்கு மற்றும் பச்சைக்கிளிகளை வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி அருகே ஒதியம்பட்டு கிராமத்தில் வனத்துறை சட்டத்தை மீறி கொக்கு மற்றும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.


இதனையடுத்து வனத்துறை அதிகாரி தியாகராஜன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வனத்துறையினரை கண்டதும் கொக்கு மற்றும் கிளிகளை விற்பனை செய்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது


பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 25 கொக்குகள், 25 பச்சைக்கிளிகளை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கொக்குகள் மற்றும் பச்சைக்கிளிகளை வனத்துறையினர் வனத்திற்கு கொண்டு வந்தனர்.


பறவைகளை விற்பனை செய்தவர்கள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். பறவைகளை விற்பனை செய்வது குற்றம்.

அதைவிட அதை வாங்குபவர்களும் குற்றவாளிகள் தான். எனவே பறவைகளை யாரும் வாங்க கூடாது என பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications