ஜஸ்ட் மிஸ்.. தவெக பொதுக்கூட்டத்தில் நடந்த அசம்பாவிதம்.. நூலிழையில் தப்பிய செவிலியர்கள்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தவெக பொதுக்கூட்டம் முடிவடைந்து செவிலியர்கள் காரில் புறப்பட்ட போது, திடீரென பேனர் மற்றும் தகரம் சரிந்து விழுந்தது. இதில் காரின் முன் பக்கம் பேனர் விழுந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன்பின் 72 நாட்களுக்கு பிறகு, விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். புதுச்சேரியில் முதலில் ரோடு ஷோ நடத்த தவெகவினர் முயற்சித்தனர். ஆனால் புதுச்சேரி அரசும், காவல்துறையும் அனுமதி வழங்கவில்லை.

TVK Vijay bjp

பொதுக்கூட்டத்திற்கும் நீண்ட நாட்களாக நடந்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அனுமதி பெற்றனர். இந்த பொதுக்கூட்டத்திற்கும் 31 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு, பேனர், தன்னார்வலர்கள், மருத்துவ உதவி, தண்ணீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி என்று பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

அதேபோல் உப்பளம் மைதானப் பகுதியில் மட்டுமே பேனர் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து தவெக தகுந்த ஏற்பாடுகளை மேற்கொண்டதோடு, விஜய்யும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக மைதானத்திற்கு வந்துவிட்டார். விஜய்யின் பிரச்சார வாகனம் மேல் நிரந்தர மைக் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு நின்றே பேசினார்.

சுமார் 12 நிமிடங்கள் உரையாற்றிய விஜய், பின்னர் விரைவாக நிகழ்ச்சியை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றார். இதன்பின் தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கிருந்த மருத்துவக் குழுவினர் புறப்பட்டனர். அதில் செவிலியர்கள் புறப்பட்ட கார் பயணித்த போது, திடீரென பொதுக்கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தகரம் மற்றும் பேனர் சரிந்து விழுந்தது.

காரின் முன் பகுதியில் பேனர் மற்றும் தகரம் விழுந்ததால், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த பேனர் சிறிது நேரத்திற்கு முன் சரிந்திருந்தாலும், மிகப்பெரிய அசம்பாவிதம் அரங்கேறி இருந்திருக்கும். இதன்பின் சிறிது நேரத்தில் தகரம் மற்றும் பேனர் அப்புறப்படுத்தப்பட்டு செல்விலியர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+