Vijay speech: வீடியோவே போட்ருக்கலாம்..எதுக்கு இவ்வளவு கூட்டம்! மொத்தமே 11 நிமிடம் 35 விநாடிகள் மட்டும் பேசிய விஜய்
புதுச்சேரி: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் கரூர் சம்பவத்துக்கு பிறகு பொதுவெளியில் மக்களை சந்திக்கிறார் என்ற அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் வெறும் 11 நிமிடம் 35 வினாடிகள் மட்டுமே பேசியது தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. காலை 5 மணி முதல் விஜய்க்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பித்த நிலையில் பொதுமக்களை அதிகம் சந்திக்கவில்லை என்ற விமர்சனம் கடுமையாக முன்வைக்கப்பட்டது. இதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கினார். தொடர்ந்து திருவாரூர், நாகை என அவரது பயணம், கரூர் விவகாரத்தால் தடைபட்டது.

தவெக விஜய்
கிட்டத்தட்ட 70 நாட்கள் வெளியே வராத விஜய் இடையில் காஞ்சிபுரத்தில் மட்டும் உள்ளரங்கில் மக்கள் சந்திப்பை நடத்தி இருந்தார். இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் அரசியலில் கால் பதிக்க நினைத்த விஜய் அங்கும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். இன்று பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரோட் ஷோ உள்ளிட்டவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பொதுக்கூட்டத்துக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. திட்டமிட்டபடி இன்று புதுச்சேரி உப்பளம் துறைமுகம் வளாகத்தில் விஜய் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம்
5000 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் பாஸ்கள் இன்றி அனுமதிக்கப்பட்டதால் காவல்துறையினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்றைய விஜயின் பேச்சு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இருந்தது. ஏறக்குறைய 11.25 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய விஜய் 11.40க்குள் மணிக்கெல்லாம் பேச்சை முடித்துவிட்டார்.
குறைந்த பேச்சு நேரம்
விஜயின் பேச்சு தமிழக வெற்றிக் கழகத்தின் youtube பக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் சரியாக 59 நிமிடம் 28வது வினாடியில் விஜய் பேச்சை தொடங்கினார். வழக்கம்போல் நெஞ்சில் குடியிருக்கும் என தனது பேச்சை ஆரம்பித்த விஜய், புதுச்சேரியும் தமிழ்நாடு ஒன்றுதான் என பேச ஆரம்பித்து, மத்திய அரசையும் திமுகவையும் விமர்சித்தார். தொடர்ந்து புதுச்சேரிக்கு தேவையான விஷயங்களை பட்டியலிட்ட அவர் 2026 தேர்தலில் புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும் வெற்றி நிச்சயம் என பேச்சை முடித்து விட்டார்.
11 நிமிடம் உரை
யூட்யூபில் அவரது உரை 01.11.03 வினாடிகளில் நிறைவடைந்தது. விஜயின் பேச்சு சரியாக சொல்லப்போனால் வெறும் 11 நிமிடங்கள் 35 வினாடிகள் மட்டுமே இருந்தது. இது ஏறக்குறைய 12 நிமிடம் கூட இருக்கலாம். விஜய் வருகையை ஒட்டி ஐந்து மணிக்கு எல்லாம் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டனர். காலை 5:00 மணியில் இருந்து விஜய் பேச்சைக் கேட்க காத்திருந்தவர்கள் வெறும்10 நிமிடங்கள் கூட நீடிக்காத விஜயின் பேச்சால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
தொண்டர்கள் அதிருப்தி
நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து முடிந்து விட்டதாக குமுறுகின்றனர் தொண்டர்கள். மேலும் விஜயின் பேச்சில் புதுச்சேரிக்கு செய்ய வேண்டியதை சொன்ன விஜய், அவர் என்ன செய்யப் போகிறார் என சொல்லவில்லை, தமிழகத்தை போல புதுச்சேரியில் ஆட்சி அமைக்க தேவையான கட்டமைப்பு? அடுத்தடுத்த திட்டங்கள்? அடுத்து என்ன நடக்கப்போகிறது? என எதையும் குறிப்பிடாமல் வெறும் வீடியோவில் பேசுவது போல பேசியிருப்பதாகவும். இதற்காகவா ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தோம்.. இதற்கு வீடியோவே போட்டு இருக்கலாம் என ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.
-
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications